Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'மாவோயிஸ்ட்களே என்னை 'மாவோயிஸ்ட்' என சொல்லமாட்டார்கள்' - மேதா பட்கர்

Webdunia
வியாழன், 8 மே 2014 (11:38 IST)
பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சமூக ஆர்வலரும், ஆம் ஆத்மி கட்சியின் வடகிழக்கு மும்பையின் நாடாளுமன்ற தேர்தல்  வேட்பாளருமான மேதா பட்கரை 'மாவோயிஸ்ட்' எனக் கூறியதற்கு கண்டனம் தெரிவித்துள்ள  மேதா பட்கர்  மாவோயிஸ்ட்களே என்னை 'மாவோயிஸ்ட்' என சொல்லமாட்டார்கள் என பதில் அளித்துள்ளார். 
சமூக ஆர்வலரான மேதா பட்கர், தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட அஜ்மல் கசாப் மற்றும் அப்சல் குரு ஆகியோருக்கு மரண  தண்டனை வழங்கியிருக்கக்கூடாது என  பேஸ்புக் சமூக இணையதளத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.
 
இதற்கு எதிராக தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்த பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, மேதா பட்கர் ஒரு 'மாவோயிஸ்ட்' எனக் கூறி இருந்தார்.
 
இதற்கு பதில் அளித்துள்ள மேதா பட்கர், சுப்பிரமணியன் சுவாமி இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. நான் ஒரு 'மாவோயிஸ்ட்' என்று அவர் நிரூபிக்கட்டும். மாவோயிஸ்ட்களே என்னை 'மாவோயிஸ்ட்' என சொல்லமாட்டார்கள் என தெரிவித்துள்ளார். 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

வன்னியர்களுக்கு சமூகநீதி வழங்காமல் ஏமாற்ற நினைத்தால்? திமுக அரசுக்கு ராமதாஸ் எச்சரிக்கை

ஆன்லைன் டிரேடிங்கில் ஒரு கோடி ரூபாய் இழப்பு… சென்னை இளைஞர் தற்கொலை!

Show comments