Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறையில் இருந்து தப்பிய கற்பழிப்பு குற்றவாளி.. ஒளிய நினைத்து கிணற்றில் விழுந்த பரிதாபம்..!

Siva
வெள்ளி, 25 ஜூலை 2025 (12:37 IST)
கேரளாவில், சௌமியா என்ற பெண்ணை கற்பழித்து கொலை செய்த வழக்கில் தண்டனை பெற்று, கண்ணூர் மத்திய சிறையிலிருந்து தப்பியோடிய குற்றவாளி கோவிந்தசாமி, ஒரு பள்ளத்தில் ஒளிவதாக நினைத்து கிணற்றில் விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்பிய சில மணி நேரங்களிலேயே அவர் மீண்டும் பிடிபட்டார்.
 
கோவிந்தசாமி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சௌமியா கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கண்ணூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இன்று  அதிகாலை சிறையிலிருந்து திடீரெனத் தப்பிய நிலையில், அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
 
சிறையிலிருந்து தப்பிய கோவிந்தசாமி, ஒரு பாழடைந்த வீட்டிற்குள் ஒளிந்து கொண்டிருந்துள்ளார். காவல்துறையினர் அந்த வீட்டை சுற்றி வளைத்தபோது, அவர் அங்கிருந்து தப்பிக்க முயன்றுள்ளார். அப்போது, ஒரு பள்ளத்தில் பதுங்குவதாக நினைத்து, எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த ஒரு பாழடைந்த கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார்.
 
காவல்துறையினர் மேற்கொண்ட தீவிர முயற்சிக்கு பின்னர், கிணற்றிலிருந்து கோவிந்தசாமியை மீட்டு, மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையிலிருந்து தப்பிய சில மணி நேரங்களிலேயே அவர் பிடிபட்டது, காவல்துறையின் விரைவான நடவடிக்கைக்கு ஒரு உதாரணமாகும். இந்த கைது சம்பவம், பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்ட அச்சத்தை போக்கியுள்ளது.
 
Edited by Siva
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவின் வளர்ச்சிக்கு எலான் மஸ்க் கண்டிப்பாக வேண்டும்: பல்டி அடித்த டிரம்ப்..!

அன்புமணியின் நடைப்பயணத்திற்கு தடையா? டிஜிபி அலுவலகம் விளக்கம்..!

முதல்வர் ஸ்டாலினுக்கு 'பேஸ் மேக்கர்' கருவி பொருத்தம்.. எப்போது டிஸ்சார்ஜ்?

இன்று 17 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து: சிறப்பு ரயில்களின் முழு விவரங்கள்..!

பீகாரில் 35 லட்சம் வாக்காளர்களை காணவில்லை.. தேர்தல் ஆணையம் அதிர்ச்சி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments