Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காணாமல் போன கொரோனா நோயாளி, மருத்துவமனை வளாகத்தில் பிணமாக மீட்பு

Webdunia
செவ்வாய், 25 ஆகஸ்ட் 2020 (21:47 IST)
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் திடீரென காணாமல் போன நிலையில் அவர் அந்த மருத்துவமனை வளாகத்திலேயே பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
வாரநாசி இந்து பல்கலைக்கழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பெற்று வந்தார். அவர் மருத்துவர்களுக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு தந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் அவருக்கு மனநிலை சரியில்லை என்றும் தெரிய வந்தது
 
இந்த நிலையில் திடீரென அவர் காணாமல் போனார். அவரை கண்டு பிடிக்க காவல்துறையினர் மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் தீவிரமான நடவடிக்கை எடுத்தனர். இந்த நிலையில் அதே மருத்துவமனையில் வளாகத்தில் அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்
 
மனநிலை சரியில்லாத நிலையில் அவர் கீழே விழுந்து இறந்திருக்கலாம் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு.. அமெரிக்க வர்த்தக வரிகள் காரணமா?

ஆர்.டி.இ. நிதி விவகாரம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

அரசு கல்லூரிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 560 கவுரவ விரிவுரையாளர்களின் பட்டியல்.. இணையதளத்தில் வெளியீடு

ஆசிரியர்கள் பணியில் தொடர வேண்டுமானால் தகுதி தேர்வு கட்டாயம் வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments