Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் மல்லையாவை அனுப்ப மறுக்கும் இங்கிலாந்து: இந்தியாவுக்கு பின்னடைவா?

விஜய் மல்லையாவை அனுப்ப மறுக்கும் இங்கிலாந்து: இந்தியாவுக்கு பின்னடைவா?
, புதன், 11 மே 2016 (13:37 IST)
இந்திய வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு திருப்பி செலுத்தாமல் தற்போது இங்கிலாந்தில் தப்பி ஓடி, வாழ்ந்து வரும் பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப முடியாது என இங்கிலாந்து தெரிவித்துள்ளது.


 
 
விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை முடக்கிய மத்திய அரசு, கடந்த மாதம் 29-ஆம் தேதி அவரை இந்தியாவிற்கு அனுப்ப இங்கிலாந்து அரசுக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்தது.
 
இந்தியாவின் கோரிக்கையை பரிசீலித்த இங்கிலாந்து அரசு, விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க மாட்டோம் என இங்கிலாந்து வெளியுறவுத்துறை மூலம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
 
இந்த அறிக்கையில், 1971-ஆம் ஆண்டு சட்டப்படி இங்கிலாந்தில் இருக்கும் தனிநபர் ஒருவர் செல்லத்தக்க பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை என கூறப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு கொண்டு வரும் சில வழிகள் அந்த அறிக்கையில் இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது இங்கிலாந்து அரசு வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், இந்தியாவுக்கு விஜய் மல்லையா மீதான குற்றச்சாட்டின் தீவிரத்தின் அடிப்படையில் உதவ இங்கிலாந்து அரசு தயாராக இருப்பதாக கூறியுள்ளது.
 
மேலும், பரஸ்பரம் சட்ட உதவி மூலமாகவோ அல்லது பிடித்துக்கொடுக்கும்படி கேட்டுக் கொண்டாலோ இங்கிலாந்து அரசு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
 
இதன் மூலம் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு திருப்பி கொண்டு வர முடியும் என கூறப்படுகிறது. இரு நாடுகளிடையே பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தம், மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடும் இந்தியர்களை பிடித்து ஒப்படைப்பதற்கான சட்டம், முதலியவற்றில் 1992 மற்றும் 1993 ஆகிய ஆண்டுகளில் இந்தியா இங்கிலாந்து நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தங்களின் அடிப்படையில் விஜய் மல்லையாவை இங்கிலாந்து உதவியுடன் இந்தியாவிற்கு கொண்டு வர முடியும் என கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இதுதான் திமுக, அதிமுக கட்சிகளின் தவ வாழ்வா?