ப.சிதம்பரத்திடம் 6 மணி நேரம் விசாரணை செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள்

Webdunia
செவ்வாய், 5 ஜூன் 2018 (21:40 IST)
ஏர்செல் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் கடந்த 2006ஆம் ஆண்டு முதலீடு செய்வதற்கு அப்போதைய நிதியமைச்சர் சட்டவிரோதமாக ஒப்புதல் அளித்ததாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கு குறித்து ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை சி.பி.ஐ. கைது செய்த நிலையில் அவர் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தார் என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில், சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி ப.சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை தன்னை கைது செய்யாமல் இருக்க ப.சிதம்பரம் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த டெல்லி பாட்டியாலா நீதிமன்றம், சிதம்பரத்தை ஜூன் 5-ம் தேதி வரை அமலாக்கத்துறை கைது செய்ய தடை விதித்தது. 
 
இந்த நிலையில் ஜூன் 5-ம் தேதியான இன்று அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு, முன்ஜாமீன் மனு மீதான விசாரணையையும் ஒத்திவைத்தது. இந்த உத்தரவின் அடிப்படையில் இன்று காலை டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் சிதம்பரம் ஆஜரானார். அவரிடம் காலையில் தொடங்கிய விசாரணை பிற்பகல் வரை நீண்டு அதன்பின்னர் உணவு இடைவேளைக்கு பின்னர் மீண்டும் விசாரணை தொடர்ந்தது. சுமார் 6 1/2 மணி நேரத்திற்கு பின்னர் சற்றுமுன்னர் ப.சிதம்பரம் விசாரணை முடிந்து வெளியே வந்தார். அவரிடம் அமலாக்கத்துறையினர் செய்த விசாரணை குறித்த தகவல்கள் வெளியாகவில்லை

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் இந்திய பிரிவு தலைவர் ஒரு பெண் மருத்துவரா? சுற்றி வளைத்து கைது செய்த போலீசார்..!

ஒரே உடலில் பாதி ஆண், பாதி பெண்.. அபூர்வ சிலந்தியை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்..!

டெல்லி குண்டுவெடிப்பு: 3 மணி நேரம் காத்திருந்த சந்தேக நபர்.. பதற்றத்தில் வெடித்ததா கார்?

இந்த பத்தில் ஒரு சின்னத்தை தாருங்கள்: தேர்தல் ஆணையத்திடம் தவெக மனு..!

குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்: அமைச்சர் ராஜ்நாத் சிங் சூளுரை..!

அடுத்த கட்டுரையில்
Show comments