திடீரென சாலையின் நடுவில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்.. வாகனங்கள் சேதம்..!

Mahendran
சனி, 7 ஜூன் 2025 (15:39 IST)
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் என்ற பகுதியில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக திடீரென ஹெலிகாப்டர் சாலையில் இறக்கப்பட்டதால், சாலையில் சென்ற வாகனங்கள் சேதமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கேதார்நாத் என்ற இடத்தில், ஹெலிகாப்டரில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. அடுத்து அந்த பைலட் அவசரமாக ஹெலிகாப்டரை சாலையில் தரை இறக்கினார். இதனால் ஹெலிகாப்டரின் வால் பகுதி மோதியதில், சாலையில் சென்ற கார் ஒன்று சேதமடைந்ததாகவும், மேலும் சில வாகனங்கள் லேசான சேதம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி, ஹெலிகாப்டர் பைலட்டுக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
 
திடீரென சாலையில் ஹெலிகாப்டர் தரையிறங்கியதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்ததாகவும், இதன் காரணமாக அந்த பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
 
இது குறித்து மாவட்ட காவல்துறை வழக்கு பதிவு செய்து, பைலட் இடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இயக்குனர் வி.சேகர் காலமானர்!...

விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாதா?!.. பொங்கிய நடிகை ரோஜா!...

வந்தே பாரத், தேஜஸ் ரயில்களில் உணவு கட்டாயமா? பயணிகள் மத்தியில் குழப்பம்!

தாம்பரம் அருகே விமானப்படை பயிற்சி விமானம் விபத்து: விமானிகள் என்ன ஆனார்கள்?

பிகார் தேர்தலில் என்.டி.எ வெற்றிமுகம்.. சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு

அடுத்த கட்டுரையில்
Show comments