Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2014 பாஜகவுக்கு வெற்றி ஆண்டு: அமித் ஷா கருத்து

2014 பாஜகவுக்கு வெற்றி ஆண்டு: அமித் ஷா கருத்து
, செவ்வாய், 23 டிசம்பர் 2014 (18:40 IST)
2014 ஆம் ஆண்டு பாரதீய ஜனதா கட்சிக்கு வெற்றியான ஆண்டு என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
 
ஜம்மு-காஷ்மீர், ஜார்கண்ட் மாநில தேர்தல் வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடி மீதான நம்பிக்கை தான் பாஜகவிற்கு வெற்றியை தேடித் தந்துள்ளதாக கூறினார்.
 
இரு மாநில தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி 3 மற்றும் 4-வது இடங்களுக்கு தள்ளப்பட்டுள்ளதையும் அமித் ஷா சுட்டிக்காட்டினார். மேலும் ஜனதா பரிவார் கட்சிகளை மக்கள் தேர்தலில் வெறுத்து ஒதுக்கிவிட்டதாகவும் கூறினார். 
 
பாஜகவின் வாக்கு சதவீதம் 31 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். வளர்ச்சியை எதிர்நோக்கி மக்கள் பாஜகவிற்கு வாக்ளித்துள்ளதாக தெரிவித்த அவர், ஜார்கண்ட் மாநிலத்தில் நல்ல நிர்வாகத்தை பாஜக அரசு தரும் எனவும் உறுதி தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil