Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இஸ்லாமியர் குறித்து பிரதமரின் சர்ச்சை பேச்சு: தேர்தல் ஆணையம் மறுப்பு கருத்து தெரிவிக்க மறுப்பு!!

Siva
செவ்வாய், 23 ஏப்ரல் 2024 (08:00 IST)
பிரதமர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படும் விவகாரத்தில் பிரதமரிடம் விசாரிக்க முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
சமீபத்தில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது நாட்டின் சொத்தின் முதல் உரிமை இஸ்லாமியருக்கு சென்றதாகவும் அப்படி என்றால் சொத்துக்கள் யாருக்கு பகிர்ந்து அளிக்கப்படும் என்றும் இந்து சொத்துக்கள் அதிக குழந்தைகளை பெற்றவர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும் என்றால் இஸ்லாமியர்களுக்கு அதிக சொத்து கிடைக்கும் என்றும் இதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா என்றும் கேள்வி எழுப்பியிருந்தார். 
 
பிரதமரின் பேச்சுக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் அதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் இது குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அதற்கு மறுத்துவிட்டது. 
 
இது குறித்து தலைமை தேர்தல் ஆணையம் கூறிய போது பிரதமரின் பேச்சு குறித்து பதில் அளிக்க விரும்பவில்லை என்றும் இந்த விவகாரத்தில் கருத்து கூற விரும்பவில்லை என்றும் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கைவிட்ட அமெரிக்கா.. உக்ரைனை ஏவுகணைகளால் துளைத்த ரஷ்யா! - குழந்தைகள் உட்பட 25 பேர் பரிதாப பலி!

காங்கிரஸ் கட்சியில் பாஜகவுக்கு வேலை செய்பவர்கள்: ராகுல் காந்தி எச்சரிக்கை

பிச்சைக்காரர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயற்சி.. ஒரு நபர் கைது..!

விஜய் கேள்விக்கெல்லாம் நான் பதில் சொல்ல மாட்டேன் - அமைச்சர் துரைமுருகன்

அதிமுக பலவீனமாக இருப்பது உண்மைதான்.. டிடிவி தினகரன்

அடுத்த கட்டுரையில்
Show comments