Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் வினாத்தாள் விற்பனை செய்யப்பட்ட விவகாரம்: மாணவி உள்பட 8 பேர் கைது!

Webdunia
புதன், 15 செப்டம்பர் 2021 (08:13 IST)
கடந்த ஞாயிறு அன்று மருத்துவ படிப்பிற்கு நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நடைபெற்ற நிலையில் இந்த தேர்வின் வினாத்தாள்களை 30 லட்சம் கொடுத்து வாங்கியதாக வெளிவந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ள நிலையில் மாணவி உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
 
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் நீட் தேர்வு நடைபெற்ற நிலையில் அந்த தேர்வு மைய பொறுப்பாளர் முகேஷ் என்பவர் மாணவி ஒருவருக்கு மொபைல் போனில் வினாத்தாளை புகைப்படம் எடுத்து அனுப்பி உள்ளதாக தெரிகிறது கேள்விகளை மட்டுமின்றி விடைகளையும் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.
 
இவ்வாறு 20 லட்சம் கொடுத்து தினேசுவரி குமாரி என்ற மாணவி இந்த வினாத்தாளை வாங்கியுள்ளதை அடுத்து ஜெய்பூர் போலீசார் அவரை கைது செய்துள்ளனர். மேலும் இந்த மோசடியில் ஈடுபட்ட மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது இவர்களில் நீட் கோச்சிங் சென்டரின் இடைத்தரகர் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
நீட் தேர்வில் உயிரைக்கொடுத்து படித்து மதிப்பெண்கள் வாங்குவதற்கு மாணவர்கள் போராடி வரும் நிலையில் எந்தவித சிரமமும் இல்லாமல் வினாத்தாளை 30 லட்சம் கொடுத்து வாங்கி மாணவியை பலர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் எப்போது? தேர்வுத் துறை அறிவிப்பு..!

நான் தயாராக தான் இருக்கிறேன், ஆனால் ராகுல் காந்தி விரும்பவில்லை: மணிசங்கர அய்யர்..!

இருமொழி கொள்கையும் ஏமாற்று தான்.. ஒரு மொழி கொள்கை போதும்: வேல்முருகன்

தமிழக அரசு நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை.. வெட்கக்கேடு! அண்ணாமலை..!

மத அடையாளங்களை அகற்ற கோரிய பள்ளி முதல்வர்.. சஸ்பெண்ட் செய்த நிர்வாகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments