Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எடியூரப்பாவுக்கு நேர்ந்த நெருக்கடி!! துணை முதல்வர்கள் நியமித்ததற்கான காரணம் என்ன?

Webdunia
புதன், 28 ஆகஸ்ட் 2019 (09:13 IST)
எடியூரப்பா அரசுக்கு மூத்த தலைவர்களால் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதஜ கூட்டணி தலைமையிலான அரசு கலைக்கப்பட்ட பின் பாஜக ஆட்சி அமைத்தது. இதனைத் தொடர்ந்து பாஜக தலைமையிலான அரசு 3 துணை முதல்வர்களை நியமித்துள்ளது.

எடியூரப்பாவை கட்டுபடுத்தவே இது போன்ற முயற்சிகள் நடப்பதாக சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார். லஷ்மன் சவதி, அஸ்வந்த் நாராயணன், கோவிந்த் கர்ஜோல் ஆகிய மூவரையும் துணை முதல்வர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 3 துணை முதல்வர்கள் நியமிப்பது என்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டதல்ல எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் முன்னாள் துணை முதலமைச்சர்களான ஆர். அசோக், ஈசுவரப்பா ஆகியோர் தங்களுக்கு மீண்டும் துணை முதலமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பு பொய்யாகியது. இதனால் அவர்கள் பெரும் மனவருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் மூத்த தலைவர்கள் பலரும் தனக்கான முக்கியத்துவத்தை பெறவில்லை என்பதால் அதிருப்தி குரல்களை எழுப்பி வருகின்றனர். இதனால் எடியூரப்பாவிற்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் அந்த துணை முதல்வர்களில் ஒருவரான ல‌ஷ்மன் சவதி என்பவர் கடந்த 2012 ஆம் ஆண்டு, சட்டப்பேரவையில் ஆபாச படம் பார்த்ததற்காக, அவருடைய அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments