காங்கிரஸ் காலத்துல சாக்லேட் கூட வாங்கி சாப்பிட முடியாது! அவ்ளோ வரிகள்! - பிரதமர் மோடி விமர்சனம்!

Prasanth K
வெள்ளி, 5 செப்டம்பர் 2025 (09:47 IST)

ஜிஎஸ்டி வரி வரம்புகள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதுகுறித்து பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் ஆட்சியில் ஏராளமான வரிகள் விதிக்கப்பட்டதாக விமர்சித்துள்ளார்.

 

மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டு நடைமுறையில் உள்ள ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு பல்வேறு பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரிகள் குறைக்கப்பட்டுள்ளன. ஆயுள் காப்பீடு உள்ளிட்டவற்றிற்கு ஜிஎஸ்டி முற்றிலுமாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஜிஎஸ்டி நடைமுறை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

இந்நிலையில் இதுகுறித்து பேசிய பிரதமர் மோடி “முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் குழந்தைகள் சாக்லேட் கூட வாங்கி சாப்பிட முடியாது. அவ்வளவு அதிகமான வரிகளை விதித்தார்கள். காங்கிரஸ் விதித்த அதிகமான வரிகளால் விவசாயிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தற்போது கொண்டு வரப்பட்டுள்ள ஜிஎஸ்டி சீர்திருத்தங்களால் வரி செலுத்தும் முறை எளிமையாக இருக்கும். மக்களின் வாழ்க்கை தரம் மேம்படுவதோடு, மக்களின் நுகர்வு திறன் மற்றும் வளர்ச்சி அதிகரிக்கும்” என கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி முன் பேசிய ஐஸ்வர்யா ராய் கருத்துக்கு திமுக அமைச்சர் பாராட்டு: என்ன பேசினார்?

என் உடல் உறுப்புகளை தானம் செய்யுங்கள்.. மெட்ரோ ரயில் முன் குதித்து தற்கொலை செய்த 16 வயது மாணவன் கோரிக்கை..!

சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: ஸ்பாட் புக்கிங் குறைப்பு!

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

அடுத்த கட்டுரையில்
Show comments