Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் மேகவெடிப்பால் கனமழை: 6 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை

Mahendran
செவ்வாய், 28 மே 2024 (16:31 IST)
கேரளாவில் திடீரென ஏற்பட்ட மேகவெடிப்பால் கனமழை கொட்டி தீர்த்த நிலையில் சாலையில் வெள்ளம் ஓடிக்கொண்டிருப்பதாகவும் இதனால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 
 
கேரளாவில் திடீரென மேகவெடிப்பால் கன மழை கொட்டி தீர்த்ததாகவும் சாலைகளில் மழை நீர் ஓடுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் இதனை அடுத்து ஆறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. 
 
கேரளாவில் கடந்த சில நாட்களாகவே கன மழை பெய்து வரும் நிலையில் தற்போது திடீரென மேகவெடிப்பால்  காரணமாக பட்டினம் திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம்,  திருச்சூர், கொல்லம் , கோட்டயம் ஆகிய மாவட்டங்களில்   வரும் 29ஆம் தேதி முதல் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
மேலும் கேரளாவில் வரும் 31ஆம் தேதி முதல் அதிக கன மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இந்த ஆண்டு ஜூன் மாதம் இயல்பை விட அதிக மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments