Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிங்கங்களுடன் செல்பி எடுத்தால் அபராதம்: குஜராத் வனத்துறை எச்சரிக்கை

சிங்கங்களுடன் செல்பி எடுத்தால் அபராதம்: குஜராத் வனத்துறை எச்சரிக்கை
, திங்கள், 13 ஜூன் 2016 (12:10 IST)
சிங்கங்களுடன் செல்பி எடுக்க வேண்டாம் என்று குஜராத் வனத்துறை பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.


இளைஞர்கள் மட்டுமின்றி பெரியவர்கள் வரை செல்பி மோகம் பரவியுள்ளது. ஆபத்தான பகுதிகளில் செல்பி எடுத்து தங்கள் உயிரையும் இழந்துள்ளனர் பலர். இவ்வாறு பல எச்சரிக்கைக்ள் விடுத்தும் செல்பி மோகம் குறைந்தபாடில்லை. சமீபத்தில் சிங்கங்களுடன் செல்பி எடுக்க முயன்ற 3 பேர் சிங்கங்களால் அடித்து கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து உஷாரான குஜராத் வனத்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். அதில்,  குஜராத்தில் உள்ள வனவிலங்குகள், சரணாலயங்கள் விலங்குகளை பார்வையிட செல்பவர்கள் சிங்கங்களுடன் செல்பி எடுக்க கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மீறுபவர்கள் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

"ராணுவம் வாபஸ் என்ற பேச்சுக்கே இடமில்லை" - இலங்கை அரசு அறிவிப்பு