Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதரில் கிடந்த குழந்தையை காப்பாற்றிய நாய்கள்

Webdunia
செவ்வாய், 8 நவம்பர் 2016 (17:20 IST)
மேற்கு வங்கத்தில் தெருவோரம் புதரில் கிடந்த குழந்தையை 4 நாய்கள், காகங்களிடம் இருந்து காப்பாற்றியுள்ளன்.


 

 
மேற்கு வங்கம் மாநிலத்தில் பதர்டி பாரா பகுதியை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் வழக்கம் போல் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தபோது தெருவோரம் புதரில் இருந்து குழந்தை அழுகை சத்தம் கேட்டுள்ளது.
 
உடனே அங்கு சென்று ஆசிரியர் பார்த்துள்ளார். 4 நாய்கள் குழந்தையை சுற்றி அமர்ந்துக்கொண்டு காகங்களை விரட்டிக் கொண்டு இருந்துள்ளன. இதைக்கண்ட ஆசிரியர் அதிர்ச்சியில் உடனே அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளார். 
 
அவர்கள் குழந்தையை தூக்கிச் சென்று பால் கொடுத்து பின்னர் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். காவல்துறையினர் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். குழந்தைக்கு சிகிச்சை முடிந்தப்பின் மாவட்ட குழந்தைகள் நல காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments