Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூபாய் நோட்டில் காந்தி படம் மாற்றமா?

ரூபாய் நோட்டில் காந்தி படம் மாற்றமா?

Webdunia
புதன், 3 ஆகஸ்ட் 2016 (14:21 IST)

மகாத்மா காந்தியின் படத்தை மாற்றி பிற தலைவர்களின் படத்தை ரூபாய் நோட்டில் வெளியிடுவது குறித்து டெல்லி மேல்-சபையில் கேள்வி எழுப்பப்பட்டது.

டெல்லி மேல்-சபையில் கேள்வி நேரத்தின்போது....

கேள்வி: “மகாத்மா காந்தியின் படத்தை மாற்றவோ, பிற தலைவர்களின் படத்தையும் ரூபாய் நோட்டில் வெளியிடவோ அரசு திட்டம் எதுவும் வைத்துள்ளதா?

பதில்: நிதித்துறை ராஜாங்க மந்திரி அர்ஜூன் ராம்மேக்வால் - “இது தொடர்பாக முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சி காலத்தில் ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு, மகாத்மா காந்தியின் படத்தை ரூபாய் நோட்டுகளில் மாற்றத் தேவையில்லை என முடிவு எடுத்து விட்டது”

கேள்வி: “இந்திய அரசியல் சாசன சிற்பி டாக்டர் அம்பேத்கரின் 125-வது பிறந்த நாளையொட்டி அவரது உருவம் பொறித்த ரூபாய் நோட்டு அல்லது நாணயம் வெளியிடப்படுமா?”

பதில்: நிதித்துறை ராஜாங்க மந்திரி அர்ஜூன் ராம்மேக்வால் - “இதையொட்டி அரசாங்கம் ஏற்கனவே புழக்கத்தில் விடாதவகையில் ரூ.125 நாணயம் வெளியிட்டுள்ளது. அம்பேத்கர் உருவம் பொறித்த 10 ரூபாய் நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி புழக்கத்துக்காக வெளியிட்டார்”

கேள்வி: ‘பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு வெளியிடப்படுமா?’

பதில்: நிதி மந்திரி அருண் ஜெட்லி -  “சோதனை அடிப்படையில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் வெளியிடுவதற்காக பிளாஸ்டிக் மூலப்பொருளை டெண்டர் விட்டு கொள்முதல் செய்ய ரிசர்வ் வங்கி தீர்மானித்திருக்கிறது. அதன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது”.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments