Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹிந்தி திணிப்புக்கு அறைகூவல் விடுக்கிறாரா அமித் ஷா ? அவரது கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்புகள் !

Webdunia
சனி, 14 செப்டம்பர் 2019 (15:33 IST)
இந்தி தினத்தை முன்னிட்டு, உள்துறை அமைச்சர் அமித் ஷா “ நாட்டின் ஒரே மொழி ஹிந்தி மொழிதான்” என கூறியதை தொடர்ந்து திமுக தலைவர் மு.க, ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இன்று நாடு முழுவதும் ஹிந்தி தினம் கொண்டாடப்படும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தனது டிவிட்டர் பக்கத்தில், ”இந்தியா வெவ்வேறு மொழி கொண்ட நாடாக இருந்தாலும், ஒட்டு மொத்த நாட்டுக்கும் ஒரே மொழி இருப்பது தான் இந்தியாவுக்கான அடையாளமாக இருக்கும். ஆதலால் மக்கள் தங்கள் தாய் மொழிகளுடன் ஹிந்தியையும் சேர்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என கூறினார்.
 
ஊழல் கரை படிந்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக, நல்லாட்சியை மத்தியத்தரமாகக் கொடுக்கும் என்று, பாஜக மீதான நம்பிக்கையில் தான் மக்கள் இரண்டாவது முறையாக, நாடாளுமன்றத்தேர்தலில் மத்தியில் ஆளும் பொறுப்பை அவர்களுக்குக் கொடுத்துள்ளார்கள். அதைக் காப்பாற்றிக் கொண்டு மக்களின் நம்பகத்தன்மையைக் காப்பாற்றாமல், சர்வாதிகாரப்போக்கைப் போன்று ஒரு ஆட்சி நடந்தால், இனி அடுத்த வருகின்ற தேர்தலில் மக்கள் ஆளும் கட்சிக்குப் பாடம் நடத்துவார்கள் என்றே தற்போதைய சூழல்கள்  எடுத்தியம்புகிறது.
தமிழகத்தில் ரயில்வேதுறைப் பொதுத்தேர்வில் தமிழ்மொழிப் புறக்கணிப்பும் கூட, ஹிந்தித்திணிப்புக்கான ஒரு முன்னோட்டமாகவே பார்க்கப்பட்டது. அதற்கு தமிழக எதிர்க்கட்சிகள் எச்சரிக்கை விடுத்தன. ஆனாலும், ஆளும் பாஜக அரசு அதைக் கண்டுகொள்ளவில்லை என்றே தெரிகிறது.
 
ஒரே நாடு, ஒரே ரேசன் திட்டத்தை எப்படி சமர்த்தாக எல்லா மாநிலங்களில் கொண்டுவர தீர்மானித்து, மத்திய அரசு,தன் அதிகாரக் காய்களை நகர்த்திவருகிறதோ, அதேபோன்று தற்போது அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து ’ஒரே நாடு, ஒரே மொழி’ என்ற கொள்கையை நடைமுறைப்படுத்த ராஜ தந்திர நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறது, அதற்கான பரீட்சையார்த்தம் தன் மேற்சொன்ன ரயில்வேதுறைப் பொதுத்தேர்வில் தமிழ் புறக்கணிப்பு.
ஆட்சியாளர்களின் சரியாக விழிப்பின்மையுடம் கூட, இன்றைய மத்திய அரசு, மாநில அரசின் கண்களை விரலை விட்டு ஆட்டிக்கொண்டுள்ளது, அதுமட்டுமல்லாமல் அனைத்து மாநில பிரச்சனைகளிலும் வேண்டுமென்றே  அதிகார மூக்கை நுழைத்து வருவதுதான் எதிர்க்கட்சித் தலைவர்களை எரிச்சல் அடையச் செய்துள்ளது. இதை மக்களும் கூர்ந்து பார்த்துக்கொண்டுள்ளார்கள் என்பதை யாரும் மறக்க வேண்டாம்!
 
இந்நிலையில், இன்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தனது டிவிட்டர் பக்கத்தில், ”இந்தியா வெவ்வேறு மொழி கொண்ட நாடாக இருந்தாலும், ஒட்டு மொத்த நாட்டுக்கும் ஒரே மொழி இருப்பது தான் இந்தியாவுக்கான அடையாளமாக இருக்கும். ஆதலால் மக்கள் தங்கள் தாய் மொழிகளுடன் ஹிந்தியையும் சேர்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். 
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இந்த டுவிட்டர் பதிவை,  நாம் தமிழர்கள் என்ற முறையில் பார்த்தால், நமக்கு காவிரி , கஜா புயல் உள்பட பல்வேறு நிகழ்வுகளில் தமிழகமும், தமிழர்களும் புறக்கணிக்கப்பட்ட போது, தமிழர்களும் இந்தியர்கள் தான் என்ற ’ஒற்றுமை இந்த உணர்வுகள்’ இவர்களிடம் இல்லாமல் போனது எப்படி என்ற கேள்வி தான்  தான் நம்மை வெகு ஆழத்துக்கு சென்று சிந்திக்கச் செய்கிறது.
 
நாம் இந்தியர்களாக அமித் ஷாவின் இந்த இந்த ’ஒரே நாடு ஒரே மொழிக் ’கொள்கையை  ஏற்றுக் கொள்ளத் தலைப்பட்டாலும் கூட, இதில் அரசியல் கலக்காமல் தும்பைப் பூவின் தூய வெண்மை போல அனைத்து மாநிலத்துக்கும் நன்மைவிளைய ஏதுவாக, மாணவர்களின் கல்வி,  இளைஞர்களின் வேலைவாய்ப்பு, மக்களுக்கு சுமூகமான மொழித்தொடர்பு ஏற்படும் சாத்தியக்கூறுகள், மத்திய  போட்டித்தேர்வுகள், மாநில அரசுத் தேர்வுகளின் மாநில மொழியின் முன்னுரிமை போன்றவற்றில் நமக்கு இனி முழுசாதகமான முறை இருக்கும் என்று எப்படி உறுதியாய் நம்புவது ? அந்த நம்பகத்தன்மைக்கு யார் அத்தாட்சி கொடுப்பது ? என்பதுதான்  இப்போது நம்மிடம் எழுந்துள்ள உள்ள ராட்சத கேள்வி !
எனவே, மாநில அரசுகள் இதுகுறித்து தெளிவாக முடிவெடுத்து, இளைஞர்கள் மக்களின் எதிர்காலத்தை தொலைநோக்கோடு அணுக வேண்டும்! அதைவிட முக்கியமானது மனிதர்களை உருவாக்க முடியும், ஆனால், ஒரு மொழியை உருவாக்க முடியாது. அதற்கு எத்தனை ஆயிரம் காலங்கள், ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பதை உணர்ந்து அரசு செயல்பட வேண்டும். ஏனென்றால் ஒரு மொழியை அழித்தால் அதன் இனத்தையே அழித்துவிடலாம் என்று கூறுவார்கள்.
நாம் கேட்பது எல்லாம் அனைத்து மொழிகளுக்கும் உரிய பிரதிநிதித்துவம் ஒன்றுதான், இதைத்தவிர வேறொன்றுமில்லை. 
 
தற்பொழுது, உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் டுவிட்டர் பதிவுக்கு நாடெங்கிலும் உள்ள நெட்டுசன்ஸ் எதிர்ப்பு தெரிவித்து, டுவிட்டரில் இந்திய அளவில் டிரெண்டிங் ஆக்கி வருகின்றனர். நாடெங்கிலும் உள்ள மக்களின் மனோபாவமும் இதுதான் என்பதை மத்தியில் ஆளுபவர்கள் எப்போது புரிந்துகொள்ளப் போகிறார்களோ?
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

கூட்டணியில் மட்டுமே பங்கு.. ஆட்சியில் எப்போதும் பங்கு கிடையாது: அமைச்சர் ஐ. பெரியசாமி

ராகுல் காந்தியை விட அதிக வாக்குகள் பெற்ற பிரியங்கா காந்தி. வயநாடு தொகுதி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments