Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தைரியம் இருந்தால் கிறிஸ்துமஸ் கொண்டாடி பாருங்கள்; பள்ளிகளுக்கு இந்து அமைப்பு எச்சரிக்கை

Webdunia
செவ்வாய், 19 டிசம்பர் 2017 (15:30 IST)
உத்தரபிரதேச மாநிலத்தின் அலிகார் பகுதியில் பள்ளிகள் கிறிஸ்துமஸ் கொண்டாட கூடாது என இந்து அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

 
உத்தரபிரதேச மாநிலம் அலிகார் பகுதியில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு, தி ஹிந்து ஜக்ரான் மார்ச் என்ற அமைப்பு எச்சரிக்கை கரிதம் எழுதி உள்ளது. அதில், தைரியம் இருந்தால் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சி நடத்திக்கொள்ளலாம். ஆனால் உங்களது பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் ஏதாவது அசாம்பாவிதம் நடந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பில்லை என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
 
இந்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த கடிதம் கிறிஸ்துவ கல்வி நிறுவனங்களை குறிவைத்து அனுப்பப்பட்டுள்ளது. இந்த கடிதம் குறித்து விளக்கம் அளித்துள்ள கல்வி நிறுவனங்கள் கூறியதாவது:-
 
இதுபோன்ற கடிதங்களால் நாங்கள் அஞ்ச மாட்டோம். நாங்கள் எல்லா மத விழாக்ககளையும் கொண்டாடுகிறோம். அதேபோன்று நாங்கள் கண்டிப்பாக கிறிஸ்துமஸ் கொண்டாடுவோம் என தெரிவித்துள்ளனர்.
 
மேலும் இந்து அமைப்பினரின் இந்த எச்சரிக்கையால் சில பள்ளிகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட தடை விதிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உயர் ரக சிகிச்சை தேவைப்படுவோர் தனியார் மருத்துவமனைக்கு செல்லுங்கள்: அமைச்சரின் சர்ச்சை பேச்சு

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை இந்திய அரசு முடக்க சொன்னது: எக்ஸ் அதிர்ச்சி தகவல்..!

திமுகவிடம் மதிமுக 25 தொகுதிகள் கேட்கிறதா? வைகோ விளக்கம்..!

கோவில் கும்பாபிஷேகம் ஒன்றும் அரசியல் நிகழ்ச்சி அல்ல.. செல்வப்பெருந்தகைக்கு பாஜக கண்டனம்..!

பேய் ஓட்டுவதாக கூறி 6 மணி நேரம் தாயை அடிக்க வைத்த மகன்.. அதன்பின் நடந்த விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments