டெல்லி சிறப்பாக செயல்படுகிறது.. இனி டெல்லியை நாங்கள் பின்பற்றுவோம்: துணை முதல்வர் டிகே சிவகுமார்

Mahendran
புதன், 11 ஜூன் 2025 (11:29 IST)
டெல்லி பாஜக மேயரை சந்தித்த கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார், டெல்லி மாநகராட்சி சிறப்பாக செயல்படுவதாகவும், இனி கர்நாடக மாநிலமும் டெல்லியைப் பின்பற்றி செயல்படும் என்றும் தெரிவித்துள்ளார். 
 
டெல்லி பாஜக மேயர் ராஜா இக்பால் அவர்களை இன்று கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் சந்தித்தார். இந்த சந்திப்புக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறிய போது, "டெல்லியில் கழிவு மேலாண்மை தொழில்நுட்பம் உள்ளது. அது மிகவும் சிறப்பாக இயங்கி வருகிறது. அதை நாங்களும் பின்பற்ற முயற்சி செய்வோம்," என்று தெரிவித்துள்ளார்.
 
 "டெல்லி, கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கிறது என்றும், இதன் மூலம் 25 மெகாவாட் யூனிட்டை வெற்றிகரமாக இயக்கி வருகிறது." இதை நேரில் பார்த்து ஆச்சரியப்பட்ட டி.கே. சிவகுமார், பெங்களூரில் கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிக்க நாங்கள் தவறிவிட்டோம். டெல்லி இந்த விஷயத்தில் சிறப்பாக செயல்படுகிறது. இனி பெங்களூரில் கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பத்தைப் பின்பற்றுவோம்," என்று அவர் தெரிவித்துள்ளார்.
 
பாஜகவின் மேயராக இருந்தாலும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த துணை முதல்வர் டெல்லியின் திட்டத்தைப் பின்பற்றுவோம் என்று கூறி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் இணைகிறாரா வைத்திலிங்கம்? தமிழக அரசியலில் பரபரப்பு..!

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

அடுத்த கட்டுரையில்
Show comments