Webdunia - Bharat's app for daily news and videos

Install App

​நாடாளுமன்ற முட்டுக்கட்டைக்கு தீர்வு காணும் மத்திய அரசின் முயற்சி தோல்வி

Webdunia
திங்கள், 3 ஆகஸ்ட் 2015 (15:38 IST)
நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்துவது தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டம் தோல்வியில் முடிந்தது.
 

 
முறைகேடு சர்ச்சைகளில் சிக்கியுள்ள மத்திய அமைச்சர்கள் சுஷ்மா சுவராஜ், ஸ்மிருதி இரானி, ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் வசுந்தரா ராஜே, மத்திய பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் ஆகியோர் பதவி விலக வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
 
இதனால் இரு அவைகளிலும் அலுவல்கள் முடங்கியுள்ள நிலையில், நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்துவது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது.
 
இந்தக் கூட்டத்தில், நாடாளுமன்ற முட்டுக்கட்டைக்கு தீர்வு காண்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் சுஷ்மா பதவி விலகும் வரை நாடாளுமன்றத்தை நடத்தவிடப் போவதில்லை என காங்கிரஸ் திட்டவட்டமாக தெரிவித்தததால், கூட்டம் தோல்வியில் முடிந்தது. இதனால் பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

Show comments