Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வரும் வாரம் பெட்ரோல் டீசல் விலை குறையும்...

Webdunia
புதன், 23 மே 2018 (13:42 IST)
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர, பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. இதனால், பெட்ரோல் ஜிஎஸ்டிக்குள் கொண்டுவரப்பட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது. 
 
மத்திய அரசு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.19.48-ம், ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.15.33-ம் உற்பத்தி வரியாக விதிக்கிறது. மாநிலத்துக்கு மாநிலம் பெட்ரோல், டீசல் விலை மாறுபடுவது மாநில அரசுகள் விதிக்கிற உள்ளூர் வரியால்தான்.
 
எனவே, பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் என்ன செய்யப்போகின்றன என்ற கேள்வியை பொதுமக்கள் எழுப்புகின்றனர். இந்நிலையில், மத்திய அரசு மூத்த அதிகாரி ஒருவர் இது குறித்து பேசியுள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது, பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவது அரசுக்கு நெருக்கடியான சூழல் ஆகும். உற்பத்தி வரி குறைப்புக்கான சாத்தியக்கூறுகளை நான் மறுப்பதற்கு இல்லை. இருந்தபோதும் அதை மட்டுமே சார்ந்து இருக்க முடியாது. 
 
உற்பத்தி வரியை குறைத்தால் நிதி பாதிப்புகள் ஏற்படும். பெட்ரோல், டீசல் சில்லரை விலையில் 20 முதல் 35 சதவீதம் மத்திய, மாநில அரசுகளின் வரியாக உள்ளது. பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதற்கு இந்த வாரம் சில நடவடிக்கைகள் எடுக்கப்படலாம். இ ந்த நடவடிக்கைகள் பல அளித்தால், வரும் வாரம் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இருக்கும் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

செந்தில் பாலாஜிக்கு இப்போதைக்கு ஜாமீன் இல்லை.! ஜூலை 10 வரை காத்திருக்க வேண்டும்.!!

நெல்லை ஜெயக்குமார் மரணம்.. கூடுதலாக 10 தனிப்படைகள்.. புதிய அதிகாரிகள் சேர்ப்பு..!

தொடர் சரிவில் பங்குச்சந்தை.. ஜூன் 4க்கு பின்னராவது உயருமா?

தங்கம் விலை இன்று திடீர் உயர்வு.. ஒரே நாளில் ரூ.560 உயர்ந்ததால் அதிர்ச்சி..!

மே 18-20.. 3 நாட்களுக்கு மிக கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments