மாசு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், உலக அதியங்களில் ஒன்றான தாஜ்மஹால், மஞ்சள் நிறமாக மாறியது பலரையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது.
தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில், உ.பி. மாநிலம், ஆக்ரா நகரில் வசித்துவரும் சுற்றுச்சூழல் ஆர்வலர் டி.கே.ஜோஷி தாக்கல் செய்த மனுவில், உலக அதியங்களில் ஒன்றான தாஜ்மஹால் மஞ்சள் நிறமாக மாறியுள்ளது.
இதை, உத்தரப் பிரதேச மாநிலம், இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனமும், அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா தொழில்நுட்ப நிறுவனமும், விஸ்கன்சின் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ஆய்வில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இது குறித்து, உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த மனு, தலைமை நீதிபதி ஸ்வதந்திர குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரத்தில், விளக்கம் அளிக்க உ.பி. அரசு, மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், வனத்துறை அமைச்சகம், நகர மேம்பாட்டுத் துறை அமைச்சகம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.