Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரதமர் மோடி ’ஜோக்கர்’ படம் பார்த்திருப்பாரோ?

பிரதமர் மோடி ’ஜோக்கர்’ படம் பார்த்திருப்பாரோ?

பிரதமர் மோடி ’ஜோக்கர்’ படம் பார்த்திருப்பாரோ?
, திங்கள், 15 ஆகஸ்ட் 2016 (13:09 IST)
12-ஆம் தேதி திரைக்கு வந்த ராஜூ முருகன் இயக்கிய ஜோக்கர் திரைப்படம் திறந்தவெளி கழிப்பிட முறையை விமர்சனத்துக்குள்ளாகியது.


 

இந்நிலையில், இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி வைத்த பிறகு, பிரதமர் மோடி பேசுகையில், 70 ஆயிரம் கிராமங்களில் உள்ள திறந்தவெளி கழிப்பிட முறையை அகற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார். அவர் அந்த விஷியத்தை பற்றி கூறிப்பிட்டது ஜோக்கர் படம் ஏற்படுத்திய தாக்கத்தால் தான் என்று இணையதளங்களில் பேசப்படுகிறது.

மேலும் அவர் உரையில், மின்சாரத்தை சேமிக்க 77 கோடி LED பல்புகளை வழங்க அரசு திட்டமிட்டு செயல்படுத்தி வருவதாகவும்,  ரூ.350 மதிப்புள்ள LED பல்புகளை ரூ.50-க்கு மத்திய அரசு வழங்குவதாகவும் தெரிவித்தார்.

மேலும், காஷ்மீர் பிரச்சனையை குறிப்பிட்டு பேசிய அவர், இளைஞர்கள் வன்முறையை கைவிட்டு, தேசிய நீரோட்டத்தில் இணைய வேண்டும் என்றும். வன்முறை, பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாத கொள்கைகளில் அவர்களால் எதுவும் சாதிக்க முடியாது என்றும் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுதந்திர தினத்தை காஷ்மீருக்கு அர்ப்பணித்து பாகிஸ்தான் சர்ச்சை