Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்து கட்சி தேர்தல் அறிக்கையிலும் மேகதாது அணை: தூண்டிவிடும் தேவகெளடா..!

Mahendran
திங்கள், 25 மார்ச் 2024 (10:19 IST)
மேகதாது அணை குறித்த விவகாரம் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகளை வளர்த்து வரும் நிலையில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தங்கள் தேர்தல் அறிக்கையில் மேகதாது அணை கட்ட வேண்டும் என்பதை குறிப்பிட வேண்டும் என முன்னாள் பிரதமர் தேவகவுடா கூறியிருப்பது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டியே தீருவோம் என ஆளும் காங்கிரஸ் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வரும் நிலையில் திமுக தனது தேர்தல் அறிக்கையில் மேகதாது அணையை கட்ட விடமாட்டோம் என்று கூறியிருந்தது

இந்த நிலையில் முன்னாள் பிரதமர் தேவகவுடா நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போது மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள திமுகவுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தங்களது தேர்தல் அறிக்கையில் மேகதாது அணையை கட்டுவோம் என வாக்குறுதி தர வேண்டும் என்றும் கூறினார்

மேலும் பெங்களூரு நகரில் பொதுமக்கள் குடிநீர் தேவைக்காக திண்டாடி வருகின்றனர் என்றும் இந்த நேரத்தில் மேகதாது அணை கட்ட வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விக்கிரவாண்டி மாநாட்டுக்கு நிலம் வழங்கியவர்களுக்கு விருந்து.. விஜய்யின் திட்டம்..!

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் பில்.. அமைச்சர் செந்தில் பாலாஜி தீவிரம்..!

புதுச்சேரியில் மீண்டும் விமான சேவை தொடக்கம்.. எந்தெந்த நகரங்களுக்கு? எப்போது?

சென்னையில் நவம்பர் 12 வரை மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு..!

தமிழகத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? முக்கிய அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments