Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் ரயில்வே நிலத்தை ஆக்கிரமித்த வங்கதேசத்தினர்.. இடித்து தரைமட்டமாக்கியதால் பரபரப்பு..!

Siva
ஞாயிறு, 8 ஜூன் 2025 (11:28 IST)
வங்கதேசத்திலிருந்து ஊடுருவிய சிலர், டெல்லியில் உள்ள ரயில்வே நிலையத்தை ஆக்கிரமித்து, வீடுகள் மற்றும் கட்டிடங்கள் கட்டிய நிலையில், அவற்றை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
டெல்லியில் உள்ள  வாசிர்பூர் என்ற பகுதியில், ரயில் பாதைக்கு இருபுறமும் ரயில்வே நிலையத்திற்கு சொந்தமான இடத்தில் பலர் கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புகள் கட்டியிருந்ததால், அந்த பகுதியில் ரயில் இயக்கத்திற்கு பெரும் இடையூறாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
மக்கள் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருப்பதால், அந்த பகுதியில் மட்டும் ரயிலை மிகவும் மெதுவாக  இயக்க வேண்டி இருந்ததாகவும் ரயில்வே அதிகாரிகள் கூறினர்.
 
இது குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கில், டெல்லி உயர்நீதிமன்றம் ரயில்வே நிலத்தை ஆக்கிரமித்தவர்களின் கட்டிடங்களை இடிக்க உத்தரவிட்டது. இதனை அடுத்து, கடந்த இரண்டு நாட்களாக ஆக்கிரமிக்கப்பட்ட கட்டடங்கள் இடிக்கப்பட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
ஆக்கிரமித்தவர்களில் பெரும்பாலும் வங்கதேசத்திலிருந்து ஊடுருவியவர்கள் என்று தெரியவந்துள்ள நிலையில், அவர்களில் 18 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் உள்ளன. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராணுவ ஆட்சியை நாங்களே முடிச்சிக்கிறோம்.. விரைவில் மக்கள் தேர்தல்! - மியான்மர் ராணுவத் தலைவர் அறிவிப்பு!

இன்று முதல் UPI பயனர்களுக்கு புதிய விதிகள் அமல்.. என்னென்ன மாற்றங்கள்?

சென்னையின் சாலை விபத்து: திமுக பிரமுகரின் பேரன் உட்பட மூவர் கைது

சென்னையில் இன்று முதல் சிலிண்டர் விலை குறைவு.. வீடுகளுக்கான சிலிண்டர் எவ்வளவு?

துர்கா பூஜைக்கு ரூ.400 கோடி.. அரசு பணத்தை அள்ளி வழங்கிய மம்தா பானர்ஜி.. கண்டனம் தெரிவித்த பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments