Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் உள்ள 3 பேருக்கு உருமாறிய டெல்டா பிளஸ் கொரோனா!

Webdunia
செவ்வாய், 22 ஜூன் 2021 (07:53 IST)
கேரளாவில் உள்ள மூன்று பேருக்கு உருமாறிய டெல்டா பிளஸ் கொரோனா பரவி இருப்பதாக அம்மாநிலத்தின் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கொரோனா வைரஸ் ஒவ்வொரு நாளும் உருமாறிக்கொண்டே புதிய வகையாக மாறிக் கொண்டு வருவதால் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் குழப்பத்தில் உள்ளனர். இந்தியாவில் ஏற்கனவே டெல்டா வகை கொரோனா வைரஸ் உருமாறிய நிலையில் அந்த வைரஸுக்கு தற்போது மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் திடீரென ஒரு சில நாடுகளில் டெல்டா பிளஸ் வகை என கொரோனா உருமாறியதாக கூறப்பட்டது. இருப்பினும் இந்த வகை இந்தியாவில் இல்லை என்று நம்பப்பட்டு கொண்டிருந்த நிலையில் திடீரென கேரளாவில் 3 பேருக்கு டெல்டா பிளஸ் வகை உருமாறிய கொரோனா பாதிப்பு உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் 
 
டெல்டா பிளஸ் வகை உருமாறிய கொரோனா வைரஸால் கேரளாவில் உள்ள பாலக்காடு மற்றும் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள மூன்று பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டர் .! இந்த வினோத சம்பவம் எங்கு தெரியுமா.?

காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு.! அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கையில் வழக்கு!!

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

அடுத்த கட்டுரையில்
Show comments