Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிஏஏ போராட்டத்தால் போர்க்களமானது டெல்லி: 5 பேர் பலியால் பதட்டம்

Webdunia
செவ்வாய், 25 பிப்ரவரி 2020 (07:27 IST)
சிஏஏ போராட்டத்தால் போர்க்களமானது டெல்லி
டெல்லியில் நடைபெற்ற சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் ஒரு போலீஸ் உள்பட 5 பேர் பலியாகியுள்ளதாகவும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வெளிவந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
டெல்லி ஷாகின் பாக் என்ற பகுதியில் நேற்று சிஏஏ சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின்போது சிஏஏ க்கு ஆதரவாக ஒரு சிலரும் களத்தில் குதித்ததால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் மற்றும் பிரச்சனை ஏற்பட்டது. இதன் காரணமாக ஏற்பட்ட கலவரம் காரணமாக அங்கிருந்த பொதுமக்களின் வீடுகள் மற்றும் போலீஸ் வாகனங்கள் பள்ளி வாகனங்கள் ஆகியவை தீக்கிரையாக்கப்பட்டன
 
இதனையடுத்து நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 5 பேர் பலியாகினர். போராட்டக்காரர்களில் ஒருவர் துப்பாக்கியை எடுத்து சுட்டதாகவும் அதில் ஒரு போலீஸ்காரர் பலியானதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது இந்த நிலையில் டெல்லியில் தனியார் பள்ளிகள் அனைத்தும் இன்று விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோதல் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் 
 
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியாவுக்கு வருகை தந்திருக்கும் நிலையில் இம்மாதிரியான மோதல் ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments