Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் டுவிட்டர் அலுவலகத்திற்குள் புகுந்த போலீஸ்: பெரும் பரபரப்பு!

Webdunia
செவ்வாய், 25 மே 2021 (13:20 IST)
ஃபேஸ்புக் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் நாளை முதல் தடை செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் இன்று டெல்லியில் உள்ள இந்திய அலுவலகங்களில் காவல்துறையினர் திடீரென புகுந்து சோதனை நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
இந்தியாவின் நற்பெயருக்கு அவமதிப்பை ஏற்படுத்தும் வகையில் டூல்கிட் ஒன்றை காங்கிரஸ் உருவாகியிருப்பதாக பாஜக குற்றம் சாட்டியதோடு இதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டது இது பொய்யான ஆதாரங்கள் என்றும் தங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்திருப்பதாகவும் எனவே பொய்யான குற்றச்சாட்டுகள் கூறிய பாஜகவினரின் டுவிட்டர் பக்கங்களை நீக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சியை ட்விட்டர் நிறுவனத்திற்கு கடிதம் எழுதியது. 
 
இந்த நிலையில் ஒருசில பாஜக டுவிட்டர் பக்கங்களை மட்டும் சந்தேகத்துக்கிடமான முத்திரையை டுவிட்டர் குறிப்பிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் டெல்லி காவல்துறை திடீரென டுவிட்டர் இந்தியா அலுலகத்திற்குள் புகுந்து சோதனை செய்து வருகின்றன. டெல்லி சிறப்பு போலீசார் இரண்டு குழுக்களாக பிரிந்து அந்த அலுவலகத்தை சோதனை செய்து வருவதாகவும் டெல்லி மட்டுமின்றி குர்கிராமில் உள்ள டுவிட்டர் இந்தியா அலுவலகத்திலும் சோதனை நடத்துவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் டுட்டர் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் மணிஸ் மகேஸ்வரி அவர்களிடம் ஆரம்பகட்ட விசாரணையில் நடந்ததாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் தருவதாக சொல்லவே இல்லை: எடப்பாடி பழனிசாமி அதிரடி விளக்கம்

சட்டப்பேரவையில் பான்மசாலா போட்டு துப்பிய எம்.எல்.ஏ.. சபாநாயகர் எச்சரிக்கை..!

மார்ச் 8 வரை தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்..! வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

ஆன்லைன் கேம் விளையாட கூடாது என கண்டித்த பெற்றோர்.. 3 பேரை கொலை செய்த வாலிபர்..!

தயாளு அம்மாள் உடல்நலக்குறைவு.. சென்னை வருகிறார் முக அழகிரி..!

அடுத்த கட்டுரையில்
Show comments