Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் நில நடுக்கம்: சென்னையிலும் உணரப்பட்டது

Webdunia
சனி, 25 ஏப்ரல் 2015 (12:33 IST)
டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் நில நடுக்கம் ஏற்படது, அதேபோல சென்னையில் ஒருசில இடங்களில் உணரப்பட்டது.
காத்மண்டு, நேபாளம் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவாகியுள்ளது. இந்நிலையில், டெல்லி, சிக்கிம், லக்னோ, கொல்கத்தா உள்பட வட பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
மேலும், ஜெய்பூர், ராஞ்சி, கவுகாத்தி, பாட்னா, ஒடிசா, உத்தரப் பிரதேசம் ஆகிய வடமாநிலங்களிம் நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது; தமிழகத்தில் சென்னையிலும் நந்தனம் உள்ளிட்ட பகுதிகளில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இந்த நில நடுக்கத்தில் மக்கள் வீடுகளைவிட்டு வெளியே வந்தனர். இந்த நில நடுக்கம் காரணமாக டெல்லி மெட்ரோ ரயில் சேவை சிறிது நேரம் நிறுத்தப்பட்டு மீண்டும் இயக்கப்பட்டது.
 
இந்த நில நடுக்கம் காலை 11.44 மணிக்கு உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இந்தியாவில் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எடப்பாடி பழனிசாமி கை நீட்டுபவர் தான் பிரதமராக வருவார்: ஆர்.பி.உதயகுமார் பேட்டி

திரௌபதி அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

மனைவியை குழி தோண்டி புதைத்த கணவர்.! வீடியோ கால் பேசியதால் கொலை.!!

நிலம் சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த்துறையினர் நிலத்தை அளவீடு செய்ய வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதா

பாலியல் புகார்..!மருத்துவமனைக்குள் சென்ற காவல் வாகனம்..! நோயாளிகள் அதிர்ச்சி..!!

Show comments