Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நண்பனின் மனைவி மேல் ஆசை… துப்பாக்கியில் இருந்து வெளியேறிய புல்லட்! யார் மேல் தெரியுமா?

Webdunia
திங்கள், 18 மே 2020 (08:48 IST)
டெல்லியில் நண்பனின் மனைவி தனது காதலை ஏற்காததால் இளைஞர் ஒருவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

டெல்லியில் ஜெயந்தி விகார் என்னும் பகுதியில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் துப்பாக்கி சத்தம் கேட்ட பெண் ஒருவர் அந்த சம்பவம் பற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் அவரைப் போலிஸார் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து போலிஸார் புகார் அளித்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில் அந்த நபர் விக்கி என்பதும் புகார் அளித்த பெண் அவருடைய நண்பர் ரமேஷின் மனைவி என்பதும் தெரியவந்துள்ளது. ரமேஷ் சிறையில் இருக்க தாய் வீட்டில் வசித்து வரும் அவரது மனைவியை தன்னுடைய வலையில் வீழ்த்த பார்த்திருக்கிறார் விக்கி. ஆனால் அதற்கு அந்த பெண் மறுக்கவே துப்பாக்கியை எடுத்துத் தன்னைத் தானே சுட்டுக்கொண்டுள்ளார்.

இதையடுத்து ஆயுதம் வைத்திருந்ததற்காகவும் குற்றச்செயலில் ஈடுபட்டதற்காகவும் விக்கி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

8 மணி நேர நிகழ்ச்சியை 45 நிமிடம் எடிட் செய்துவிட்டார்கள்.. ‘நீயா நானா’ தெருநாய்கள் விவாதம் குறித்து நடிகை அம்மு..!

ஜெர்மனி பயணத்தில் முதலமைச்சர்: ரூ.3,201 கோடி முதலீடுகளை ஈர்த்தது தமிழகம்

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு.. அமெரிக்க வர்த்தக வரிகள் காரணமா?

ஆர்.டி.இ. நிதி விவகாரம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments