Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளம்பெண்ணை 12கி.மீ இழுத்து சென்ற கார்! – அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சி!

Webdunia
செவ்வாய், 3 ஜனவரி 2023 (10:40 IST)
டெல்லியில் விபத்தில் சிக்கிய இளம்பெண்ணை 12 கி.மீ தூரத்திற்கு கார் இழுத்து சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைக்கட்டியிருந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர் சுல்தான்புரி பகுதியில் தனது ஸ்கூட்டியில் சென்றுக் கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த காரில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் காருக்கு கீழே இளம்பெண் சிக்கிய நிலையில் காரை நிறுத்தாமல் 12கி.மீ தொலைவிற்கு ஓட்டி சென்றுள்ளனர்.

இதனால் காரின் கீழ் சிக்கி ரோட்டில் உராய்ந்தபடி இருந்ததால் அந்த பெண் பரிதாபமாக இறந்துள்ளார். ஆடைகள் கிழிந்து நிர்வாணமான நிலையில் சாலையில் கிடந்த அவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி போலீஸார் விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் காரில் இளம்பெண் சிக்கி இழுத்து செல்லப்பட்ட சிசிடிவி வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என சமூக வலைதளங்களில் பலரும் குரல் எழுப்பி வருகின்றனர்.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments