Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆயிரம் கோடி மதிப்புள்ள போதை பொருட்களை மொத்தமாக அழித்த சுங்க துறை!

Webdunia
சனி, 25 ஜனவரி 2020 (09:16 IST)
டெல்லியில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்களை அழித்துள்ளனர்.

இந்தியாவில் போதை பொருட்கள் நீடித்து வரும் நிலையில் சுங்க துறை அதிகாரிகள் அதை தடுக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதுதவிர போதைப்பொருள் தடுப்பு பிரிவு உருவாக்கப்பட்டு உள்ளூர் சந்தைகளில் போதை பொருள் விற்பனை, பதுக்கல் போன்றவையும் கண்டறியப்பட்டு தடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சமீப காலத்தில் பல்வேறு இடங்களில் பல்வேறு சோதனைகளில் சிக்கிய வெவ்வேறு போதை பொருட்கள் சுங்கத்துறை கட்டுப்பாட்டில் இருந்தன. அவற்றை புதுடெல்லியில் மொத்தமாக அழித்துள்ளனர். சுமார் 200 கிலோவுக்கும் அதிகமாக இருந்த அந்த போதை பொருட்களின் மதிப்பு 1000 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. நாட்டின் தலைநகரில் மட்டும் இவ்வளவு போதை பொருட்கள் பல்வேறு காலக்கட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தினமும் ஷூட்டிங் நடத்தும் ஸ்டாலின்.. கருப்புக்கொடி போராட்டம் அறிவித்த அண்ணாமலை!

7 மாவட்டங்களில் இன்று, 10 மாவட்டங்களில் நாளை! - குளிர்விக்க வரும் மழை!

அண்ணாமலை அப்படி பேசக்கூடாது.. திடீரென விஜய்க்கு ஆதரவாக பேசிய சீமான்!

விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு நிராகரிக்கும்! - அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி!

50 கோடி ரூபாய்க்கு நாய் வாங்கிய பெங்களூர் நபர்! உலகின் விலை உயர்ந்த நாயிடம் என்ன ஸ்பெஷல்?

அடுத்த கட்டுரையில்
Show comments