Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா எதிரொலி: டெல்லி சி.ஆர்.பி.எப். தலைமை அலுவலகத்திற்கு சீல்

Webdunia
ஞாயிறு, 3 மே 2020 (12:32 IST)
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தினமும் நாடு முழுவதும் சுமார் 1000 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் சுமார் 100 பேர் உயிரிழந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பொது மக்களை மட்டுமின்றி சுகாதாரத் துறையினர், காவல் துறையினர், துப்புரவு பணியாளர்கள், மற்றும் ராணுவ வீரர்கள் உள்பட அனைவரையும் தாக்க தொடங்கி விட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இன்று சத்தீஷ்கர் மாநிலத்தின் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி டெல்லியில் சி.ஆர்.பி.எப். உயரதிகாரியுடன் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து டெல்லியில் உள்ள சி.ஆர்.பி.எப்.  தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே டெல்லி பட்டாலியனைச் சேர்ந்த 135 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments