Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடியுடன் செல்பி எடுத்த ஆஸ்திரேலிய பிரதமர்: டெல்லி மெட்ரோ ரயிலில் கலகல!!

Webdunia
செவ்வாய், 11 ஏப்ரல் 2017 (05:48 IST)
ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் அரசுமுறை பயணமாக இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள நிலையில் நேற்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து இருநாடுகள் உறவுகள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பில் ஆறு  ஒப்பந்தங்களில் இரு தலைவர்களும் கையெழுத்திட்டனர்.



 


இதன்பின்னர் மோடி, மால்கம் ஆகியோர் டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்தனர். அப்போது இருவரும் மாறி மாறி செல்ஃபி எடுத்துக் கொண்ட சம்பவம் அனைவரையும் கலகலப்பாக்கியது.

ஆஸ்திரேலிய பிரதமர் உடனான சந்திப்பு குறித்து மோடி கூறியபோது, "சமீபகாலமாக இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான உறவுகளுக்கு முக்கியத்துவம் கிடைத்துள்ளது. மால்கம் வருகையால் அது தற்போது மேலும் பலப்படுத்தப்பட்டு, புதிய மைல்கற்களை தொட்டுள்ளது" என்று கூறினார்.

ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் பேசுகையில், "இந்திய மாணவர்களுக்கு ஆஸ்திரேலியாவில் சிறப்பான வாய்ப்புகளை உருவாக்கி தருவதில் தொடர்ந்து முன்னுரிமை அளிப்போம்" என்று கூறினார்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கழிவறையை சுத்தம் செய்த மாணவர்கள்..! விளம்பரம் நடிச்சது மட்டும்தான் சாதனையா அன்பில்? - அண்ணாமலை ஆவேசம்!

அதிமுகவை மீட்போம்! ஆட்சியில் அமர்வோம்! மீதி முடிவுகள் மதுரை மாநாட்டில்..! - ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு!

லாக்கப் மரணங்களை தடுக்க வக்கில்லை; இது மக்கள் விரோத ஆட்சி என்பதற்கு இதை விட வேறென்ன சாட்சி? ஈபிஎஸ்

உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்தப்படுவது ஏன்? எப்படி நடக்கும்? ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா விளக்கம்..!

அனைத்து ரயில்களிலும் சிசிடிவி கேமிரா.. ஒவ்வொரு பெட்டியிலும் 4 கேமிராக்கள்.. ரயில்வே அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments