Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி தேர்தல் தேதி அறிவிப்பு: அரசியல் கட்சிகளிடையே பரபரப்பு!

Webdunia
திங்கள், 6 ஜனவரி 2020 (16:25 IST)
டெல்லியில் கடந்த 2015 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு தேசிய கட்சிகளை எதிர்த்து போட்டியிட்ட அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி மாபெரும் வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் அக்கட்சி 67 தொகுதிகளை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. பாஜக மூன்று தொகுதிகளில் வென்ற நிலையில் காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை 
 
இந்த நிலையில் டெல்லி சட்டமன்றத்திற்கான தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது, தேர்தல் ஆணையம் சார்பில் வெளியிட்டுள்ள இந்த தேர்தல் அறிவிப்பின் தேர்தல் தேதிகள் குறித்த விவரங்களை தற்போது பார்ப்போம் 
 
டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் ஜனவரி 14ஆம் தேதியும், வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஜனவரி 21ஆம் தேதியும், வேட்பு மனுக்கள் பரிசீலனை ஜனவரி 22ம் தேதியும், வேட்பு மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாள் ஜனவரி 24ம் தேதியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து டெல்லியில் பிப்ரவரி 8ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் பிப்ரவரி 11-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அன்றைய தினம் மாலையே முடிவுகள் அனைத்தும் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது 
 
டெல்லியில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அங்கு அரசியல் கட்சிகள் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மீண்டும் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளுமா? அல்லது பாஜக, காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளில் ஒன்று ஆட்சியை பிடிக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3வது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை.. உடலை தானமாக வழங்க கடிதம்..!

2 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது.. கழிவறையில் வழுக்கி விழுந்ததால் கை எலும்பு முறிவு..!

அதிகாரத்தை கையில் வைத்து கொண்டு முற்றுகைப் போராட்டமா? விந்தையிலும் விந்தை: தவெக அறிக்கை..!

ஜூன் மாத சுப்ரபாத சேவைக்கு டிக்கெட் முன்பதிவு எப்போது? திருப்பதி தேவஸ்தானம் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments