Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மான் வேட்டை வழக்கு: சல்மான்கானுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

Webdunia
புதன், 9 ஜூலை 2014 (15:47 IST)
மானை வேட்டையாடிய வழக்கில் நடிகர் சல்மான் கானுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பிரபல இந்தி நடிகர் சல்மான்கான் கடந்த 1998 ஆம் ஆண்டு இந்தி படப்பிடிப்புக்காக ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் சென்றிருந்தார். அப்போது சல்மான்கான் உள்ளிட்ட 6 பேர் அங்குள்ள வனத்தில் மானை வேட்டையாடியதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக சல்மான் கான் மீது ராஜஸ்தான் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அங்கு மான் வேட்டையாடிய குற்றத்துக்காக அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து ராஜஸ்தான் நீதிமன்றத்தில் சல்மான்கான் மேல்முறையீடு செய்தார். அதை தொடர்ந்து 5 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் ராஜஸ்தான் அரசு மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சல்மான் கானுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

அதில் 4 வாரத்துக்குள் சல்மான்கான் பதில் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!

மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!

Show comments