Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவை உருக்குலைத்த டவ்-தே புயல்: சாலை சின்னாபின்னாமானதால் அதிர்ச்சி

Webdunia
ஞாயிறு, 16 மே 2021 (19:35 IST)
கேரளாவை உருக்குலைத்த டவ்-தே புயல்: சாலை சின்னாபின்னாமானதால் அதிர்ச்சி
அரபிக்கடலில் உருவான டவ்-தே புயல் கேரளாவை சின்னாபின்னமாக்கி உள்ள புகைப்படங்கள் தற்போது வெளிவந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
கடந்த சில நாட்களுக்கு முன் அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாகி அது புயலாக மாறியது. அந்த புயல் சற்று முன்னர் கேரளாவை கடந்து குஜராத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கேரளாவில் புயல் கரையை கடந்த போது கேரளாவின் முக்கிய சாலைகள் சின்னாபின்னமான தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
குறிப்பாக கேரளாவில் உள்ள கோழிக்கோடு மாவட்டத்தில் கடல் சீற்றம் காரணமாக உருக்குலைந்த துறைமுகத்தின் சாலை குறித்த புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாளை குஜராத்தில் இந்த புயல் கரையை கடக்கும் என்றும் அப்போது இதேபோன்று குஜராத் மாநிலத்திலும் சேதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் கேரளாவில் சேதமடைந்த பகுதிகளில் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணிகளை கவனித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! ஆனாலும் டாக்டர்கள் சொன்ன அறிவுரை!

12 ஆயிரம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்! TCS எடுத்த அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!

ஆயுள் தண்டனை அல்லது 7 ஆண்டு சிறை தண்டனை.. தேர்வு செய்ய குற்றவாளிக்கு வாய்ப்பு அளித்த நீதிபதி..!

பில்கேட்ஸுக்கு பரிசாக கொடுத்த தூத்துக்குடி முத்து.. பிரதமர் மோடி அளித்த தகவல்..!

துபாய் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணுக்கு வேலை.. விமான நிலையத்தில் இறங்கியதும் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments