Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹலால் உணவை எதற்காக இந்துக்கள் சாப்பிடணும்!? – பாஜக சி.டி.ரவி கருத்தால் சர்ச்சை!

Webdunia
புதன், 30 மார்ச் 2022 (13:08 IST)
கர்நாடகாவில் இஸ்லாமிய உணவகங்களை இந்துக்கள் புறக்கணிக்க வேண்டும் என்ற கருத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் சி.டி.ரவி கருத்து தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் ஹிஜாப் சர்ச்சையை தொடர்ந்து இஸ்லாமியர்களுக்கு எதிரான பல்வேறு தகவல்கள் பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீப காலமாக இஸ்லாமிய உணவகங்களில் செய்யப்படும் ஹலால் உணவுகளை இந்துக்கள் புறக்கணிக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக தேசிய பொதுசெயலாளர் சி.டி.ரவி “ஹலால் என்பது பொருளாதார ஜிஹாத். இஸ்லாமியர்கள் மற்றவர்களுடன் வியாபாரம் செய்வதைத் தடுக்க இந்த ஜிஹாத் பயன்படுத்தப்படுகிறது. முஸ்லிம்கள், இந்துக்களிடம் இருந்து இறைச்சியை வாங்க மறுக்கும்போது, நாம் மட்டும் ஏன் அவர்களிடம் இருந்து வாங்க வேண்டும்.  முஸ்லிம்கள் ஹலால் இல்லாத இறைச்சியை பயன்படுத்தினால், இந்துக்களும் ஹலால் இறைச்சியை பயன்படுத்துவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இன்று 75வது அரசியலமைப்பு தினம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments