Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேல் சிகிச்சைக்காக பெங்களூரு கொண்டு செல்லப்பட்டார் கேப்டன் வருண் சிங்!

Webdunia
வியாழன், 9 டிசம்பர் 2021 (17:03 IST)
வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் இருந்து கேப்டன் வருண் சிங் பெங்களூரு கொண்டு செல்லப்பட்டார். 

 
நேற்று நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய ராணுவத்தின் முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களின் உடல் டெல்லி கொண்டு செல்லப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் இந்த ஹெலிகாப்டர் விபத்தில், 80 சதவீத தீக்காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்ட ராணுவ கேப்டன் வருண்சிங் உடல்நிலை குறித்த தகவல் வெளியாகியது. கேப்டன் வருண் சிங்கின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தாலும் சீராக உள்ளதாக மருத்துவ குழு தரப்பில் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
இதனிடையே ஹெலிகாப்டர் விபத்தில் தீக்காயமடைந்த வருண் சிங் மேல் சிகிச்சைக்காக பெங்களூரு கொண்டு செல்லப்பட்டார். வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் இருந்து கேப்டன் வருண் சிங் பெங்களூரு கொண்டு செல்லப்பட்டார். பெங்களூரு விமானப்படை மருத்துவமனையில் கேப்டன் வருண் சிங் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது,
 
மேலும் இவருக்கு கடைசி நேரத்தில் என்ன நடந்தது விபத்து எதனால் நடந்தது போன்ற விவரங்கள் தெரிய வாய்ப்புள்ளதாகவும் நம்பப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

IRCTC-யின் 'ஸ்ரீ ராமாயண யாத்திரை' டீலக்ஸ் ரயில் பயணம்.. தொடங்குவது எப்போது? கட்டணம் எவ்வளவு?

தேர்தலுக்கு பின்புதான் முதலமைச்சர் யார்? என்பதை முடிவு செய்வோம்: டிடிவி தினகரன்

டெல்லி வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து.. லிப்டில் சிக்கிய நபர் பரிதாப பலி..!

மகாராஷ்டிர அரசியலில் வரலாறு காணாத திருப்பம்: ராஜ் - உத்தவ் தாக்கரே மீண்டும் கைகோர்க்கிறார்களா?

கச்சத்தீவு எங்களுக்கு சொந்தம்.. திருப்பி தர முடியாது: இலங்கை திட்டவட்ட அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments