Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் திறந்து வைத்த விமான நிலையத்தில் விரிசல்? உடைந்து தொங்கிய மேற்கூரை!

Webdunia
திங்கள், 24 ஜூலை 2023 (09:26 IST)
சமீபத்தில் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட விமான நிலையத்தின் மேற்கூரை உடைந்து தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



இந்தியாவின் ஒரு பகுதியான அந்தமான் தீவுகள் வங்க கடலில் பல மைல் தொலைவில் அமைந்துள்ளன. அந்தமானுக்கு கப்பல், விமானம் இரண்டு வழிகளில் பயணம் செய்ய முடியும். இதற்காக அந்தமானின் போர்ட்ப்ளெயரில் வீர் சாவர்க்கர் விமான நிலையம் செயல்பட்டு வருகிறது.

சமீபத்தில் இந்த விமான நிலையம் புதுப்பிக்கப்பட்டு பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது. புதிய விமான நிலைய கட்டிடம் திறந்து சில நாட்களே ஆகியுள்ள நிலையில் விமான நிலையத்தின் ஒரு பகுதியில் மேற்கூரை உடைந்து தொங்கிக் கொண்டிருந்துள்ளது. இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

இதை எதிர்கட்சியினர் சிலர் விமர்சித்து வரும் நிலையில் விமான நிலையத்தில் தொங்கிய மேற்கூரையை பழுது பார்க்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெருநாய்களை கருணைக் கொலை செய்ய அனுமதி! - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

காங்கிரஸை காலி பண்ணி விட்டதே தேர்தல் ஆணையம்தான்! - ராகுல்காந்தி குற்றச்சாட்டு!

புற்றுநோய், தைராய்டு.. தீராத நோய்கள்! ஒரு குடும்பமே தற்கொலை! - ஈரோட்டில் அதிர்ச்சி சம்பவம்!

பிரதமர் மோடியை சந்தித்தபோது மனு அளித்த எடப்பாடியார்? - மனுவில் இருந்தது என்ன?

மேற்குவங்கத்தில் 1.25 கோடி வாக்காளர்கள் சட்டவிரோதமாக வந்த குடியேறிகள்: பாஜக அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments