Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய தடுப்பூசி சான்றிதழ்களை ஏற்க மறுக்கும் ஐரோப்பிய யூனியன்!

Webdunia
வியாழன், 1 ஜூலை 2021 (09:41 IST)
இந்தியாவில் போடப்படும் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளின் சான்றிதழ்களை ஐரோப்பிய யூனியன் ஏற்க மறுக்கிறது.

ஐரோப்பிய யூனியனில் மக்கள் பயணம் செய்யும் இ பாஸ் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அப்படி பயணம் செய்யும் மக்கள் கட்டாயம் ஐரோப்பிய யூனியனால் அங்கிகரிக்கப்பட்ட 4 வகையான தடுப்பூசிகளை செலுத்திக்கொண்ட சான்றிதழை அளித்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவித்துள்ளது. இந்திய அரசின் கோவின் இணையதளத்தால் வழங்கப்படும் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ்களை வழங்கினால் ஏற்க மறுக்கிறதாம்.

இந்நிலையில் ஐரோப்பிய யூனியனுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இந்திய தடுப்பூசி சான்றிதழ்களை அனுமதிப்பது சம்மந்தமாக பிரதிநிதிகளுடன் பேசியுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் அப்படி அனுமதிக்காவிட்டால் ஐரோப்பாவில் இருந்து இந்தியா வரும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் கட்டாயத் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று அறிவுறுத்தியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேஸ் சிலிண்டருக்கு ரூ.1.50 கூடுதல் வசூல்! 7 ஆண்டுகளாக நடந்த வழக்கு! - தீர்ப்பு என்ன தெரியுமா?

டிஜிட்டல் அரெஸ்ட் என மிரட்டல்.. பயத்தில் விஷம் குடித்து உயிரை விட்ட அரசு பள்ளி ஆசிரியை..!

மக்கள் போராட்டங்களை கண்டு நடுங்குகிறது ஸ்டாலின் மாடல் அரசு: ஈபிஎஸ் விமர்சனம்..!

டங்ஸ்டன் விவகாரத்தில் நாடகமாடும் திமுக: அண்ணாமலை கண்டனம்..!

நாங்க போராட அனுமதி இல்லை.. நீங்க மட்டும் போராட்டம் நடத்தலாமா? - திமுகவிற்கு அண்ணாமலை கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments