Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடி படத்தை கிழித்த எம்.எல்.ஏவுக்கு அபராதம்: எவ்வளவு தெரியுமா?

Webdunia
செவ்வாய், 28 மார்ச் 2023 (16:26 IST)
பிரதமர் மோடியின் படத்தைக் கிழித்த எம்எல்ஏ உள்பட ஆறு பேர்களுக்கு வெறும் ரூபாய் 99 அபராதமாக விதித்து தீர்ப்பளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மாநிலத்தை சேர்ந்த எம்எல்ஏ ஆனந்த் பட்டேல் என்பவர் கடந்த 2017 ஆம் ஆண்டு வேளாண் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டத்தின் போது துணைவேந்தர் அறையில் இருந்த பிரதமர் மோடியின் படத்தை கிழித்தார். 
 
இதுகுறித்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இன்று இந்த வழக்கின் தீர்ப்பு வெளியான நிலையில் துணை வேந்தர் அறையில் இருந்த பிரதமர் மோடியின் படத்தை கிழித்த காங்கிரஸ் எம்எல்ஏ ஆனந்த் பட்டேல் உள்பட ஆறு பேர்களுக்கு ரூபாய் 99 அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 
 
இந்த அபராத தொகையை ஏழு நாட்களுக்குள் கட்ட வேண்டும் என்றும் அவ்வாறு கட்டவில்லை என்றால் சிறை தண்டனை எனவும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தில் இந்து மத துறவி கைது.. அமெரிக்க பாடகி கண்டனம் கைது..!

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி: தீவிர சிகிச்சை என தகவல்..!

காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை..!

6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம்

உதயநிதி ஸ்டாலினுக்கு அஜித் பிறந்தநாள் வாழ்த்து ... அரசியலில் ஈடுபட விருப்பமா?

அடுத்த கட்டுரையில்
Show comments