Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணீஷ் சிசோடியாவுக்கு 7 நாட்கள் அமலாக்கத்துறை காவல் - நீதிமன்றம் உத்தரவு

Webdunia
வெள்ளி, 10 மார்ச் 2023 (18:43 IST)
மணீஷ் சிசோடியாவுக்கு 7 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் எடுக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி யூனியனில், புதிய மதுபான கொள்கை முறைகேடு புகாரில் கடந்த 26 ஆம் தேதி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்தது. இதனை அடுத்து அவரை  சிபிஐ காவலில் அடைக்கப்பட்டு, அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து, நீதிமன்றம், சிசோடியாவை மேலும் 2 நாட்கள்( மார்ச் 6ஆம் தேதி வரை) காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி அளித்தது.

சிபிஐ காவல் முடிந்த நிலையில்,  மார்ச் 6 ஆம் தேதி  டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் சிசோடியாவை சிபிஐ ஆஜர்படுத்தினர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வரும் மார்ச் 20 ஆம் தேதி வரை சிசோடியாவை திகார் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கின் அவரது ஜாமீன் மனு மீது சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்து, அவருக்கு ஜாமீன் கிடைத்தாலும், அமலாக்கத்துறை கைது செய்யலாம் என கூறப்பட்டது.

இந்த நிலையில். மதுபானக் கொள்கை முறைக்கேட்டில் கைதாகியுள்ள மணீஸ் சிசோடியாவுக்கு 7 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் எடுக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிசோடியாவை நேற்று அமலாக்கத்துறையினர் கைது செய்த நிலையில், அவருக்கு டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றம், காவலில் விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.

மதுபான ஊழல் வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையும் தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பட்டப்பகல் படுகொலை; குற்றவாளி பட்டியலில் உதவி ஆய்வாளர்கள்! - அடுத்தடுத்து பரபரப்பு!

தேவாலயத்தில் பிரார்த்தனை நடந்தபோது பயங்கரவாத தாக்குதல்: 38 பேர் சுட்டுக் கொலை!

மல்லிகார்ஜுன கார்கேவின் இளைய மகன் கவலைக்கிடம்.. புற்றுநோய் பாதிப்பு..!

வௌவ்வால் வறுவலை சில்லி சிக்கன் என விற்ற கும்பல்! - சேலத்தில் அதிர்ச்சி!

இந்தியாவை அச்சுறுத்தும் நாய்க்கடி சம்பவங்கள்! தானாக விசாரிக்க முன்வந்த உச்சநீதிமன்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments