Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சாமியாரின் ஆணுறுப்பை வெட்டியதாக கூறப்பட்ட மாணவி மாயம்!

சாமியாரின் ஆணுறுப்பை வெட்டியதாக கூறப்பட்ட மாணவி மாயம்!

சாமியாரின் ஆணுறுப்பை வெட்டியதாக கூறப்பட்ட மாணவி மாயம்!
, புதன், 21 ஜூன் 2017 (10:48 IST)
கேரளாவில் பாலியல் தொல்லை கொடுத்த ஒரு சாமியாரின் ஆணுறுப்பை, மாணவி ஒருவர் வெட்டி வீசிய சம்பவம் சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அந்த மாணவியை காணவில்லை என அவரது ஆண் நண்பர் ஒருவர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த கங்கேசானந்தா என்ற சாமியார் அதே பகுதியில் வசிக்கும் தாய் மற்றும் மகளை பல வருடங்களாக பாலியல் தொல்லைக்கு உட்படுத்தி வந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் அவரின் கொடுமை தாங்க முடியாமல், அந்த இளம்பெண் சாமியாரின் ஆணுறுப்பை வெட்டி வீசினார்.
 
இதையடுத்து அந்த சாமியார் மருத்துவமமையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இது தொடர்பாக அந்த சாமியாரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, அந்த பெண் என் உறுப்பை வெட்டவில்லை. நானே அறுத்துக் கொண்டேன் என விளக்கமளித்தார்.
 
இந்நிலையில் இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக சாமியாரின் உறுப்பை நான் துண்டிக்கவில்லை, போலீசார் தான் அவ்வாறு கூறுகின்றனர் என அந்த மாணவி கூறியது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
சட்டக்கல்லூரியில் படித்து வரும் அந்த மணவியை சங்பரிவார் அமைப்பை சேர்ந்த அந்த சாமியாரின் ஆட்கள் கடத்தி வைத்துள்ளதாக மாணவியின் ஆண் நண்பர் கேரள உயர் நீதிமன்றத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
 
அந்த மனுவில் சாமியாரின் ஆட்களின் மிரட்டுதலின் பேரில் தான் மாணவி சமீபத்தில் சாமியாரின் ஆணுறுப்பை தான் வெட்ட வில்லை என கூறினார். உண்மையிலேயே சாமியாரின் பாலியல் தொல்லைக்கு ஆளானதாலேயே அந்த மாணவி தான் அவரின் ஆணுறுப்பை துண்டித்தார் என பாதிக்கப்பட்ட மாணவியின் ஆண் நண்பர் கூறியுள்ளார்.
 
பாதிக்கப்பட்ட மாணவி தற்போது வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதால் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார் மாணவியின் ஆண் நண்பர். இந்த மனு மீதான விசாரணை வந்த போது இது தொடர்பாக பதிலளிக்குமாறு காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு அவரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த காவல்துறைக்கு அதிரடி உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்தது. இது கேரளாவில் பெரும் பரபப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்த ஜனாதிபதி யார்? தீர்மானிக்கும் சக்தியாக உள்ள அதிமுக!