Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜோதிடர் பேச்சை நம்பி 10 குழந்தைகள் பெற்ற தொழிலாளி...

Webdunia
செவ்வாய், 28 மார்ச் 2017 (17:59 IST)
ஜோதிடர் ஒருவர் கூறியதை நம்பி 10 குழந்தைகள் பெற்றெடுத்த தம்பதி குறித்து செய்திகள் வெளியாகியுள்ளது.


 

 
கர்நாடக மாநிலத்தில் வசிப்பவர் ராமகிருஷ்ணப்பா(47). இவர் ஒரு கூலித் தொழிலாளி. இவரின் மனைவி பாக்கியம்மா(42). இவர்களுக்கு 23 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அப்போது, உங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தால், உங்களின் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும். வசதிகள் பெருகும் என அவர் கூறியுள்ளார்.
 
இதனால் அந்த தம்பதிக்கு ஆண் குழந்தை மீது மோகம் ஏற்பட்டது. ஆனால், முதலில் பெண் குழந்தை பிறந்தது. அடுத்த முறையும் பெண் குழந்தையே பிறந்தது. இப்படியே 9 பெண் குழந்தைகளை பாக்கியம்மா பெற்றெடுத்தார். நடுவில் ஒருமுறை ஆண் குழந்தை பிறந்து, சில நேரங்களிலேயே இறந்து விட்டது.இதனால் அவர்கள் அந்த கிராமத்தினர் கிண்டலுக்கும், கேலிக்கும் ஆளானார்கள். தொடர்ந்து பெண் குழந்தையே பிறக்கும் என அவர்கள் கூறிவந்தனர்.
 
ஆனாலும் ஜோதிடர் கூறியபடி, தனக்கு ஆண் குழந்தை பிறக்கும் என ராமகிருஷ்ணப்பா திடமாக நம்பி வந்துள்ளார். இந்நிலையில் 10வது முறையாக பாக்கியம்மா மீண்டும் கர்ப்பம் அடைந்து, தற்போது  ஒரு அழகிய ஆண் குழந்தையை அவர் பெற்றெடுத்துள்ளார். 
 
தற்போது தங்களின் ஆசை நிறைவேறிவிட்டது எனவும், இனிமேல் தங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும் என ராமகிருஷ்ணப்பா கூறி வருகிறார். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்வாதிகாரத்தை சாமானிய மக்களிடையே மட்டும் காட்டும் திமுக அரசு: ஜெயக்குமார் கண்டனம்

இன்று 2025 புத்தாண்டு.. முதல்வர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய் வாழ்த்து..!

புத்தாண்டில் ஒரு மகிழ்ச்சியான செய்தி: சிலிண்டர் விலை குறைப்பு!

சென்னையில் தொழில் வரி 35 சதவீதம் உயர்வு: மாநகராட்சி முடிவால் கடும் அதிருப்தி..!

எக்ஸ் தளத்தின் ஐடியை மாற்றிய எலான் மஸ்க்.. புதிய பெயர் என்ன தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments