Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிபர்ஜாய் புயலின் பெயரை குழந்தைக்குச் சூட்டிய தம்பதி

Webdunia
வியாழன், 15 ஜூன் 2023 (20:58 IST)
அரபிக் கடலில் உருவான பிபர்ஜாய் புயல் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில், குஜராத்தில் வசிக்கும் தம்பதியர் தங்களின் ஒரு மாத பெண் குழந்தைக்கு பிபர்ஜாய் என்று பெயரிட்டுள்ளனர்.

தென்கிழக்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, வலுப்பெற்று புயலாக உருமாறியுள்ளது.

பிபர்ஜாய் என்று பெயரிடப்பட்டுள்ள இப்புயல் வடக்கு நோக்கிச் சென்று கடந்து, அதிதீவிர புயலாக உருவானது.

இந்தப் புயல் இன்று குஜராத்தின் கட்ச் மாவட்டம் மாண்ட்விக்கும், பாகிஸ்தானின் கராச்சிக்கும் இடையே குஜராத்தின் ஜகாவு துறைமுகம் அருகே இன்று மாலை கரையைக் கடக்க உள்ளது.

எனவே புயல் கரையைக் கடக்கும்போது கற்றி வேகம் மணிக்கு150 கிமீ வேகத்தில்  வீசும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

இந்த  நிலையில், ஒவ்வொரு  பேரிடர்களின் போதும் பிறக்கும் குழந்தைகளுக்கு தனித்துவமாக பெற்றோர் பெயர் வைப்பர். அதன்படி, கொரொனா காலத்தில், கொரொனா என்றும், லாக்டவுன் என்றும், டிட்லி, ஃபானி ஆகிய புயல்களின் பெயரை வைத்தனர்.

இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு  அரபிக் கடலில் உருவான பிபர்ஜாய் புயல் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில், குஜராத்தில் வசிக்கும் தம்பதியர் தங்களின் ஒரு மாத பெண் குழந்தைக்கு பிபர்ஜாய் என்று பெயரிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments