Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி30

Webdunia
ஞாயிறு, 27 செப்டம்பர் 2015 (07:21 IST)
7 செயற்கைகோள்களுடன் பிஎஸ்எல்வி சி30 ராக்கெட்  நாளை விண்ணில் செலுத்தப்படவுள்ளது.


 

 
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் மையத்திலிருந்து பி.எஸ்.எல்.வி சி30 ராக்கெட் மூலம் இந்த செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்படுகின்றன. இதற்கான 50 மணி நேரக் கவுண்டவுன் நேற்று தொடங்கியது.
 
இந்த ராக்கெட்டில் விண்வெளி ஆய்வுக்காக இஸ்ரோ உருவாக்கியுள்ள ’ஆஸ்ட்ரோசாட், அமெரிக்காவின் 4 நானோ செயற்கைகோள்கள், இந்தோனேசியா, கனடா ஆகிய நாடுகளின் தலா ஒரு செயற்கைகோள் என மொத்தம் 7 செயற்கைகோள்கள்  பிஎஸ்எல்வி சி30 ராக்கெட்டில் பொருத்தப்பட்டுள்ளன.
 
ராக்கெட்டில் ஒவ்வொரு கட்டமாக எரிபொருள் நிரப்பும் பணிகளும், எரியூட்டும் பணிகளும் வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றன.  நாளை விண்ணில் செலுத்தப்படும் 7 செயற்கைகோள்களில் இந்தியாவின் ஆஸ்ட்ரோசாட் செயற்கைக்கோள் பூமியில் இருந்து, 650 கி.மீ., உயரத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளது.
 
இந்தியா சார்பில் அண்டவெளியில் நிலைநிறுத்தப்படும் ஆஸ்ச்ரோசாட்டின் ஆயுட்காலம் 5 ஆண்டுகளாகும். சூரிய சூரிய குடும்பத்தை அடுத்துள்ள விண்வெளி பகுதியை அறிந்து கொள்ளவும், எக்ஸ்-ரே கதிர்களின் மூலத்தை அறிந்து கொள்ளவும் இந்த செயற்கைகோள் உதவும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரஷ்யாவிடம் இழந்த பகுதிகளை யுக்ரேன் மீட்க அமெரிக்கா உதவுமா? டிரம்பின் முன்னாள் ஆலோசகர் தகவல்

ரூ.500 நோட்டாக மாறிய முத்திரைத்தாள்: யூடியூப் பார்த்து கள்ளநோட்டு அச்சடித்த கும்பல்..

3.60 கோடி லிட்டர் தண்ணீர் திருடிய தனியார் கல்லூரி: ரூ.2 கோடி அபராதம்!

234 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெல்லும்.. திமுக கூட்டணி 2026 வரை நீடிக்காது: பிரேமலதா..!

விவசாயக் கடன் தள்ளுபடி.. பென்சன் வரம்பு உயர்வு.. 25 லட்சம் வேலைவாய்ப்பு! - மகாராஷ்டிரா பாஜக வாக்குறுதிகள்!

Show comments