Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நகைகளை விற்று கழிப்பறை கட்டிய கவுன்சிலர்!!

Webdunia
செவ்வாய், 28 பிப்ரவரி 2017 (14:51 IST)
சத்தீஸ்கர் மாநிலம் சன்னா கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற உறுப்பினர் தன் நகையை விற்று கழிப்பறையை கட்டியுள்ளார்.


 
 
சத்தீஸ்கர் மாநிலம், ஜாஷ்பூர் மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமம் சன்னா. இந்த கிராமத்தின் ஊராட்சி மன்ற உறுப்பினராக காஜல் ராய்,  அந்த கிராமத்தில் வீட்டில் கழிப்பறை இல்லாததால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து உணர்ந்தவர்.
 
இதனால் இதற்கு தீர்வு காண நினைத்த காஜல் ராய் முதலில் தன்னிடம் இருந்த நகையை விற்று தன் வீட்டிற்கு கழிப்பறை கட்டினார். அதில் மீத மிருந்த பணத்தை அருகில் உள்ள வீடுகளுக்கு கொடுத்து கழிப்பறை கட்ட கூறினார்.
 
அது மட்டுமில்லாமல், கிராமத்தில் உள்ள பெண்களுடன் இணைந்து, செங்கல் சூளையில் வேலை செய்து, அதில் கிடைக்கும் பணத்தை வைத்து கழிப்பறைகளை கட்டும் முயற்சியில் ஈடுபட்டார்.
 
இதுவரை காஜல் ராய் 100க்கும் மேற்பட்ட கழிப்பறைகளை மக்களுக்காக கட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போலியான பாலியல் பலாத்காரம் புகார்.. பெண் ஐடி ஊழியர் கைது..!

10 ஆண்டுகளுக்கு முன் தாய் அவமதிப்பு.. காத்திருந்து பழிவாங்கிய மகன்.. சினிமா போல் ஒரு சம்பவம்..!

துணை ஜனாதிபதி ராஜினாமா விவகாரம்: இரு அவைகளும் அமளியால் ஒத்திவைப்பு..!

சென்னை விமான நிலையத்தில் முன் பதிவு டாக்சிகளுக்கு ஆன்லைன் வசதி: பயணிகளுக்கு பெரும் நிம்மதி!

ஒரே நாளில் உச்சம் சென்ற தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.74000ஐ தாண்டியதால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments