Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி - பினராயி விஜயன்

Webdunia
வியாழன், 12 மார்ச் 2020 (20:47 IST)
கேரளாவில் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி - பினராயி விஜயன்

இந்தியாவில் 73 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 
 
உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் கொஞ்சம் கொஞ்சமாக பரவி வருகிறது. சீனாவில் தொடங்கி கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது. இதுவரையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் 1,25,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
இந்தியாவில் 74பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் ஒருவர் நேற்று மரணமடைந்தார் என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
அதிகபட்சமாக கேரளாவில் 16 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 10 பேரும், மகாராஷ்டிராவில் 11 பேரும், டெல்லியில் 6 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
தற்போது கொரோனா பெருந்தொற்று நோயாக அறிவிக்கப்பட்டுள்ளதால் கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகள் எமெர்ஜென்சி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில், திருச்சூர் மற்றும் கண்ணூரில் தலா ஒருவருக்கு கொரோனா  பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments