இந்தியாவில் இருவருக்கு கொரோனா: உறுதிப்படுத்திய மத்திய அரசு!

Webdunia
திங்கள், 2 மார்ச் 2020 (14:51 IST)
இந்தியாவில் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 
 
சீனாவை தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. சீனாவில் மட்டுமே கொரோனாவல் 2,912 பேர் உயிரிழந்துள்ளனர். எனினும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் உயிரிழப்புகள் சீனாவில் குறைந்து வருவதாக தெரியவருகிறது. 
 
சீனாவில் நேற்று 42 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். இது முந்திய அனுதினமும் உயிரிழப்பவர்களின் விகிதத்தை விட குறைவானதாகும். சீனாவில் உயிரிழப்பு விகிதங்கள் குறைந்தாலும் இத்தாலி, தென் கொரியா, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. 
 
உலகளவில் கொரோனா வைரஸால் 3000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது. இந்நிலையில், இத்தாலியிலிருந்து டெல்லி வந்த ஒருவருக்கும், துபாயில் இருந்து தெலங்கானா வந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மிளகாய் பொடி தூவி நகைக்கடையில் கொள்ளையடிக்க முயற்சித்த பெண்.. அதன்பின் நடந்த ட்விஸ்ட்..!

சகோதரர் மருத்துவமனையில் அனுமதி!.. பெங்களூர் பறக்கும் ரஜினிகாந்த்!...

பிறந்தநாளன்று தன்னை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொண்ட காவலர்!.. வேலூரில் சோகம்...

பிகார் பெண் எம்.பி. இரண்டு முறை வாக்களித்தாரா? இரு கைகளிலும் மை இருந்ததால் சர்ச்சை..!

8க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கடித்து குதறியதால் 6 ஆடுகள் பலி.. நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments