உருமாறிய கொரோனா... இந்தியாவில் 58 பேருக்கு தொற்று!!

Webdunia
செவ்வாய், 5 ஜனவரி 2021 (11:21 IST)
இந்தியா வந்தவர்களில் இதுவரை 58 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

 
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிக மோசமாக பரவி லட்சக்கணக்கானவர்களை பலியாக்கி உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் இங்கிலாந்து நாட்டிலிருந்து பரவிவருகிறது. 
 
இதனை அடுத்து பல நாடுகள் இங்கிலாந்து நாட்டிலிருந்து வரும் விமானத்தை தடை செய்துள்ளன என்பதும் இங்கிலாந்து நாடும் தன்னுடைய நாட்டில் பரவி வரும் புதிய உருமாரிய கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்தவர்களில் இதுவரை 58 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டு அவர்களுக்கு மருத்தவமனைகளில் தனி அறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இந்தியாவில் 6 சோதனை மையங்களில் எடுக்கப்பட்ட சோதனை முடிவுகளில் தற்போது இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண் ஐடி ஊழியரை விடுதிக்குள் நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி.. மதுரை லாரி டிரைவர் கைது..!

டீக்கடை நடத்துபவரின் வீட்டில் ரூ.1 கோடி ரொக்கம்.. கிலோ கணக்கில் தங்கம்.. 75 வங்கி கணக்குகள்.. என்ன நடந்தது?

கணவரின் தம்பி பிறப்புறுப்பை துண்டித்த அண்ணி! உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

தீபாவளி ஸ்பெஷலாக அறிவிக்கப்பட்டிருந்த 6 சிறப்பு ரயில்கள் ரத்து: என்ன காரணம்?

வங்கக்கடலில் உருவாகிறது புயல் சின்னம்.. சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments